பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்1

28. இராவணன் சோகப் படலம்
 

தன் மகன் இந்திரசித்து இறந்த செய்தி கேட்டுப் பெருந்துயருற்ற 
இராவணன் நிலையைக் கூறுதலின் இது இராவணன் சோகப் படலம் 
எனப் பெயர் பெற்றது.
 

இலக்குவனால் இந்திரசித்து இறந்ததும் அதனைத் தூதர் சிலர்
ஓடிச்சென்று    நடுக்கத்துடன்   இராவணனிடம்  கூறுகின்றனர்.
அங்ஙனம் கூறிய தூதர்களை வாளால் எறிந்த இராவணன் துயரம்
தாளாமல் விழுந்து புலம்புகின்றான். பின்பு போர்க்களம் புகுந்து 
ஒருநாள் முழுதும் தேடி இந்திரசித்துவின் தலையைக் காணாது 
பெருந்துயருற்றுப்  புலம்பித்  வித்துத்   தன்  அரண்மனைக்கு 
உடம்பை  மட்டும்  எடுத்துச்  செல்லுகின்றான்.   மண்டோதரி, 
மகன்  உடல்  மேல்  விழுந்து   கதறுகின்றாள்.  இராவணன், 
இவையெல்லாம்   சீதையால்  வந்ததன்றோ   என   நினைந்து 
அவளைக்   கொல்ல   வாளெடுத்து  ஓடுகின்றான்.  இதனைக்
கண்ணுற்ற  மகோதரன்  என்ற அமைச்சன்  தன் மன்னவனுக்கு
ஏற்படும்  பழியை  நினைந்து அஞ்சி,  துணிவோடு  இராவணன்
பாதங்களில் விழுந்து பெண் கொலையால்  வரும் பழியினைப்
பலவாறு  எடுத்துக்  கூறுகின்றான். அதனைச்  செவி மடுத்த
இராவணன்  அச்செயலைக்  கைவிட்டு, மைந்தன்  உடலைத்
தைலத்தோணியில்   வளர்த்துமாறு    கட்டளையிடுகின்றான்.
இச்செய்திகள் இப்படலத்துக் கூறப்படுகின்றன.
 

தூதர் இராவணனுக்கு இந்திரசித்து இறந்தமை தெரிவித்தல்
 

9186.

ஓத ரோதன வேலை கடந்துளார், 

பூதரோதரம் புக்கென, போர்த்து இழி 

சீதரோதக் குருதித் திரை ஒரீஇ, 

தூதர் ஓடினர், தாதையின் சொல்லுவார். 

 

தூதர் தாதையின் சொல்லுவார்- (போர்க்களத்திலிருந்து
இராவணனின்)    தூதுவர்கள்  (நடந்தவற்றை)  தந்தையாகிய
இராவணனிடம் சொல்லும் பொருட்டு;  ரோதன ஓத வேலை
கடந்துளார்
- அழுகையாகிய அலைகடலைக் கடந்தவர்களாய்;
போர்த்துஇழி   சீதரோதக்  குருதித்திரை  ஒரீஇ-
(போர்க்களமெங்கும்)  போர்த்தது  போல்  மூடிக்கொண்டு
இழிந்து ஓடுகின்ற குளிர்ந்த