பக்கம் எண் :

 வானரர் களம் காண் படலம்225

32. வானரர் களம் காண் படலம்
 

இராமன் கொன்று   குவித்த  அரக்கர்களின் மூலப்படையை
வானரங்கள்   கண்டதைக்    கூறும்    படலம்.  இது 'வானரர்
களங்காட்சிப்   படலம்',   'வானரச் சேனை களங்காண் படலம்,
'வானரத்     தலைவர்கள்    களங்காட்சிப்படலம்',    'வானர
வீரர்கள் களங்காண்படலம்'  எனவும்   காணப்பெறும். வேறுசில
சுவடிகளில் இப்படலத்தை 'இராவணன் களங்காண் படல'த்துடன்
சேர்த்துக் 'களங்காண் படலம்' எனக் குறிப்பர்.
 

மூலபலப்படை அழிந்தது. சுக்கிரீவன் தன்படையுடன் சென்று
இராமனை வணங்கி 'அரக்கர்   படையை   வென்றது எவ்வாறு?'
எனக் கேட்டான்.   'வீடணனோடு  களத்திற்சென்று  கண்டால்
புலப்படும்'  என    இராமன்   கூறினான்.   வானர   வீரர்கள்
வீடணனோடு சென்று அவன் களத்தைக் காட்டி நிற்க அதுகண்டு
அஞ்சினர்.   பின்னர்   அதனை   வகைப்படுத்திக்   கூறுமாறு
வீடணனைக்    கேட்டனர்.   வீடணனும்    ஒவ்வொன்றையும்
சிறப்பித்துக்  கூறக்   கண்டு   சலிப்படைந்த   வானர   வீரர்
'இவ்வாறே காலம் கடத்துவதை விட இதனை முடித்த இராமனை
வணங்குவோம்'  என்றனர். பின்னர்  வீடணனோடு  இராமனிடம்
சென்று வணங்கி அவன் திறனை வியந்து நின்றனர்.
 

மூலபலப் படையின் அழிவு காணச் சுக்கிரீவனை இராமன் ஏவல்
 

9581.

ஆய பின், கவியின் வேந்தும், அளப்ப அருந்

தானையோடும்,

மேயினன், இராமன் பாதம் விதி முறை வணங்கி;

வீந்த

தீயவர் பெருமை நோக்கி, நடுக்கமும் திகைப்பும்

உற்றார்,

ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர், நாணம்

உற்றார்.

 

ஆய பின்- அதன் பிறகு; கவியின் வேந்தும் அளப்ப
அருந்தானையோடும்   மேயினன் 
- சுக்கிரீவனும் அளக்க
முடியாத தன் வானரப் படையோடு வந்து சேர்ந்தால்; இராமன்
பாதம்