பக்கம் எண் :

 வானரர் களம் காண் படலம்235

உச்சிச் சென்றான்ஆயினும், வெய்யோன், உதயத்தின்
குச்சிச் சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர்.
 

அச்சின்   திண்தேர்  ஆனையின், மாமேல் - அச்சடைய
வலிய   தேரின்  மேலும் யானைகள்  மேலும்  குதிரைகள் மேலும்;
காலாளின் மொய்ச்சுச் சென்றார்- காலாட் படையோடு நெருங்கிப்
போர்க்குச்   சென்ற  அரக்கர்களின்;  மொய் குருதித்  தாரைகள்
முட்ட 
-  (உடம்பிலிருந்து)   வெளிவந்த    இரத்த  வெள்ளங்கள்
பாய்ந்ததால்; வெய்யோன் உச்சிச் சென்றான் ஆயினும்- கதிரவன்
வானின்   நடு  உச்சியை   அடைந்தான்   ஆனாலும்;  உதயத்தின்
முச்சிச்  சென்றான்
  -  உதயமலையில்  தோன்றும்  செங்கதிரவன்;
ஒத்துளன் ஆகும் குறி காணீர்- ஒத்திருக்கும் நிலையைப் பாருங்கள்.
 

(20)
 

9601.

'கால் தோய் மேனிக் கண்டகர் கண்டப்படு காலை,
''ஆறோ!'' என்ன, விண் படர் செஞ் சோரியது ஆகி,
வேறாய் நின்ற வெண் மதி செங் கேழ் நிறம் விம்மி,
மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர்.
 

கால்தோய்   மேனிக் கண்டகர்  - கருநிற  உடல் கொண்ட
அரக்கர்; கண்ட படுகாலை- துண்டு படும் போது; ஆறோ என்ன-
இது  ஆறோ  எனக் கண்டோர் கருத; விண்படர் செஞ்சோரியது
ஆகி
 -  வானில் பாயும்   சிவந்த   இரத்தமாகி; வேறாய் நின்ற
வெண்மதி  
-   வேறாக நின்ற வெண்ணிறச் சந்திரன்; செங்கேழ்
நிறம் விம்மி 
-   செந்நிறம்   மிகுந்து;  மாறுஓர்  வெய்யோன்
மண்டிலம்
  - மாறுபட்ட  ஒரு கதிரவனின் மண்டிலம்; ஒக்கின்றது
காணீர்
- போன்றுள்ளதைப் பாரீர். 
 

(21)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

9602.

'வான் நனைய, மண் நனைய, வளர்ந்து எழுந்த

கொழுங் குருதி மகர வேலை -

தான் நனைவுற்று எழும் பறவைச் சிறை தெளித்து,

புது மழையின் துள்ளி தாங்கி,

மீன் அனைய நறும் போதும், விரை அரும்பும்,

சிறை வண்டும், நிறம் வேறு எய்தி,

கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற

போன்று ஒளிர்வ காண்மின்! காண்மின்!