| வானரர் களம் காண் படலம் | 237 |
9604. | 'கய்க் குன்றப் பெருங் கரைய, நிருதர் புயக் | | கல் செறிந்த, கதலிக் கானம் | | மொய்க்கின்ற பரித் திரைய, முரண் கரிக் கைக் | | கோள் மாவ, முளரிக் கானின் | | நெய்க்கின்ற வாள் முகத்த, விழும் குடரின் | | பாசடைய, நிணமேல் சேற்ற, | | உய்க்கின்ற உதிர நிறக் களம் குளங்கள், | | உலப்பு இறந்த, உவையும் காண்மின்! | | கய்க்குன்றப் பெருங்கரைய- தும்பிக்கைகளை உடைய மலை போன்ற யானைப் பிணங்களால் ஆகிய கரையையுடையனவும்; நிருதர் புயக் கல் செறிந்த - அரக்கரின் தோள்களால் ஆகிய படிக்கற்கள் நெருங்கியுள்ளனவும்; கதலிக் கானம் மொய்க்கின்ற பரித் திரைய - கொடித்திரளாகிய காடுகள் உடைய குதிரைகளாகிய அலைகளை உடையனவும்; முரண்கரிக்கைக் கோள் மாவ- பகையுடன் மாறுபட்ட யானையின் தும்பிக்கை ஆகிய முதலைகளை உடையனவும்; முளரிக்கானின் நெய்க்கின்ற வாள் முகத்த - தாமரைக் காடுபோல ஒளியில் பொலிவு பெற்ற முகங்களை உடையனவும்; விழும் குடரின் பாசடைய- வீழ்கின்ற குடல்களாய பாசிகளையுடையனவும்; நிணமேல் சேற்ற - கொழுப்பாகிய சேற்றை உடையனவும்; உய்க்கின்ற உதிர நிறக் களம் குளங்கள் - (அரக்கர் உடம்பிலிருந்து) சொரிகின்ற இரத்தமாம் நீரையுடைய அகன்ற குளங்கள்; உலப்பு இறந்த - எண்ணிக்கையைக் கடந்து நிற்பன; உவையும் காண்மின் - இவற்றையும் பாருங்கள்; | கரை, படிக்கல் வரிசை, அலைகள், முதலைகள், தாமரைக் காடு, பச்சையிலை, சேறு, நீர் ஆகியவை உள்ள குளம் போலப் போர்க்களம் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. கய்க்குன்றம் - யானை, கோள்மா - முதலை. இறந்த வீரர்களின் முகம் தாமரை போல் மலர்ந்த நிலை 'வெஞ்சோரி நீராக, வீழ்தொங்கல் பாசடை யொக்க அடு செங்களம் பங்கயப் பொய்கை ஆமாறு காண்மின்களே' (கலிங்கத்துப் பரணி 487) என்ற பாடலுடன் ஒப்பிடலாம். | (24) | 9605. | 'நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின், | | உதிர நீர் நிறைந்த காப்பின், | | கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின், | | இன மள்ளர் பரந்த கையில், |
|
|
|