பக்கம் எண் :

238யுத்த காண்டம் 

படுங் கமல மலர் நாறும் முடி பரந்த

பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை,

தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே

எனப் பொலியும் தகையும் காண்மின்!

 

நெடும்  படை  வாள்  நாஞ்சில் உழுநிணச் சேற்றின் -
நீண்டவாளாம் கலப்பையாக உழுத கொழுப்பாகிய சேறுள்ளதாலும்;
உதிரநீர்  நிறைந்த   காப்பின்  -  இரத்தமாம்   நீர்நிறைந்த
தேக்கமுள்ளதாலும்; கடும்பகடு  படி கிடந்த  கரும்பரப்பின்-
(விரைந்து   செல்லும்  எருமைகளோடு  தரையில் கிடந்த பரம்பு
அடிக்கும் பலகை  கொண்டுள்ளது   போல) விரைந்து செல்லும்
யானைப்பகடு   படிந்த    கரிய     பெரும்பரப்பையுள்ளதாலும்;
இனமள்ளர் பரந்த  கையில் - (இரைமாத்த உழவர் பரவியுள்ள
மக்கள் போல்)      இனமொத்த   வீரர்   பரவிய   பக்கங்கள்
உள்ளதாலும்;   படுங்கமல   மலந்    நாறும்    முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த
-(களையுள்ள தாமரை மலரோடு நாற்று
முடிகள்  கிடந்த  பெரிய   களங்கள் போல)  தலைமாலையாகத்
தாமரை சூடியதால் மணம் வீசும் முடிமகுடங்கள் கிடக்கும் பெரிய
கிடக்கைகள்    உள்ளமையாலும்;  பண்ணை  - (வயல்)  வீரரின்
பரந்த கூட்டம் உள்ள;தடம்பணையின் நறும்பழனம் தழுவியதே
- எனப்   பொலிவும்  தகையும்   காணீர்.   பெரிய   மருதநிலம்
பரப்பினை   உடைய (போர்க்களம்)   நறுமணம்  வீசும்   வயல்;
எனப்  பொலியும்  தகையும்  காண்மின்  -  எனத்தோன்றும்
தன்மையையும் பாருங்கள். 
 

(25)
 

9606.

'வெளில் தீர்த்த வரை புரையும் மிடல் அரக்கர்

உடல் விழவும், வீரன் வில்லின்

ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்ஏறு

பல படவும், உலகம் கீண்டு

நளில் தீர்த்த நாகபுரம் புக்கு, இழிந்த

பகழி வழி நதியின் ஓடி,

களிறு ஈர்த்துப் புக மண்டும் கடுங் குருதித்

தடஞ் சுழிகள் காண்மின்! காண்மின்!

 

வெளில்   தீர்த்த  வரைபுரையும்- வெற்றிடமில்லாத மலையை
ஒத்த; மிடல் அரக்கர் உடல் விழவும் - வலிமை மிக்க அரக்கரின்
உடல்கள் கீழே விழவும்; வீரன் வில்லின் ஒளிறு ஈர்த்த - இராமன்
வில்லின் ஒளிவீசும் காதளவு இழுக்கப்பெற்ற; முழுநெடு நாண் உரும்
ஏறு பலபடவும்
- முழுமையும் நீட்சியுமுடைய நாண் ஒலி