பக்கம் எண் :

 இராவணன் களம் காண் படலம்243

33. இராவணன் களம் காண் படலம்
 

'மூலபலப்படை  அழிந்தது உண்மை தானா?' என  அறிய
இராவணன் கோபுரத்தின்  மீது  ஏறி  அரக்கர்படை  அழிந்த
அவலக்காட்சியைக் காணுகின்ற பகுதி.
  

இலக்குவனை    வீழ்த்திய    மகிழ்ச்சியில்  வீரர்களுக்கு
விருந்தளிக்க   வானநாட்டாரை   இராவணன்  அழைக்கிறான்.
வந்தவர்களிடம் விண்ணுலக இன்பத்தை மண்ணுலகில் வீரர்க்கு
அளிக்குமாறு   ஏவுகிறான். அவன்  ஏவலுக்கேற்ப  விண்ணுலக
உணவை  அரக்கர்க்கு  தயாரிக்கின்றனர்.  அப்போது  தூதுவர்
வந்து மூலபலப்படை அழிந்ததை இராவணனுக்கு மறைபொருளாக
ஓதுகின்றனர்.     அதுகேட்டுத்     திகைத்தான்.    பின்தேறி
'வலியவரும் கடல்   மணலினும் பலராகியவரும் ஆன அரக்கர்
இறந்தது  பொய்' என்றான், அருகிலிருந்த  மாலியவான் 'மெய்'
என்றான். 'இனியாகிலும்  நற்செய்கை புரிக'  என அறிவுரையும்
புகன்றான்.  இராவணனோ தான்   இலக்குவனைக் கொன்றதால்
இராமனும் இறப்பான். வெற்றி தன்னுடையதென்றான். அது கேட்ட
தூதுவர், அனுமன்  கொணர்ந்த மருத்து மலையால் இலக்குவன்
உயிர்பெற்றதைக்   கூறினர். அவர்கள்   சொல்லின்   உண்மை
தேடிக் கோபுரத்தின் மீது ஏறிப் போர்க்களத்தைப்  பார்க்கிறான்.
கணவரை இழந்த அரக்கியர் அழுகை ஒலி  செவியில் புகுகிறது. 
அது கேட்டுக் கலங்கிய இராவணன் கீழே இறங்கினான்.
இச்செய்திகளை இப்படலம் கூறுகிறது.
 

போர் வீரர்க்கு விருந்து அளிக்க இராவணன் முனைதல்
 

9617.

பொருந்து பொன் பெருங் கோயிலுள், போர்த்

தொழில்

வருந்தினர்க்கு, தம் அன்பினின் வந்தவர்க்கு,
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்,
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான்,
 

பொருந்து பொன் பெருங்கோயிலுள் - இராவணன் தான்
வாழ்கின்ற  பொன்னால்  கட்டப்பெற்ற  பெரிய அரண்மனையில்
போர்த்தொழில் வருந்தினர்க்கு- போர் வினையில் தன்