பக்கம் எண் :

 இராவணன் தேர் ஏறு படலம்257

34. இராவணன் தேர் ஏறு படலம்
 

இராவணன் இராமனோடு போர் புரியத் தேர்மீது ஏறியதைக்
கூறும் பகுதி ஆகும்.
 

அரசவையில்  அரியணை  மீது   சினத்துடன்   வீற்றிருந்த
இராவணன், மகோதரனை நோக்கி 'எஞ்சிய சேனை யாவற்றையும்
போர்க்கு வருமாறு முரசறைக' என ஆணையிட்டான். அது கேட்ட
அரக்கர்படை  திரண்டது.   இராவணன் கொடை  மேற்கொண்டு
போர்க்கோலம் பூண்டு தெய்வத் தேரை வரச்  செய்து அதனைத்
தொழுதான். மறையவர்க்குத் தானமளித்து ரதமேறிப் பகையை ஒழிக்க
வேண்டும்; அல்லது  நான்   மடியவேண்டும்   என்று வஞ்சினம்
கூறினான். வில் நாண் எறிந்து மிகுந்த ஆரவாரத்துடன் போர்க்குப்
புறப்பட்டான். அதனால் உலகமெலாம் நடுங்கின. வானரத் தலைவர்
அஞ்சிக் குலைந்தனர்.
 

அப்போது வீடணன் இராமனிடம் இராவணன் போர்புரிய
வந்தனன் என்பதைக் கூறினான். இச்செய்திகள் இப்படலத்துள்
கூறப்பட்டுள்ளன.
 

இராவணன் எஞ்சிய படையைத் திரட்டுதல்
 

9642.

பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின்

நோக்கி,

' ''ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த

சேனை

யாதையும் எழுக!'' என்று ஆனை மணி முரசு

எற்றுக!' என்றான்.

 

பூதரம் அனைய  மேனி  -  மலை  போன்ற உடலையும்;
புகைநிறப் புருவச் செந்தீ - புகைபோல் கரிய புருவங்களையுடைய
செந்தீ போன்ற; மோதரன் என்னும் நாமத்து ஒருவனை- மகோதரன்
எனும் பெயருள்ள ஒருவனை; முறையின் நோக்கி- முறைக்கு ஏற்பப்
பார்த்து; இறந்திலாதது ஏதுஉளது- சாவாத