பக்கம் எண் :

288யுத்த காண்டம் 

நல்வினை களிப்பினொடு  துள்ள - வணங்கத்  தக்க நல்வினை
மகிழ்ச்சியால்  துள்ளவும்; துயரத்து அழுந்து அமரர் அந்தணர்
-  துயரத்தில்     அழுந்திக்கிடந்த     தேவர்கள்     அந்தணர்
ஆகியோரின்; கை முந்துற்று   எழுந்து தலை ஏற  -  கைகள்
முந்திக்கொண்டு அவர்கள்  தலைமேல் ஏறவும்; இராமன் இனிது
ஏறினன்
- இராமபிரான் இந்திரன்  அனுப்பிய தேரின்மீது இனிதே
ஏறினான்.
 

தீவினை வாடுதல், நல்வினை துள்ளுதல், அமரர் அந்தணர் கை
தலைமேல் வைத்து வணங்குதல் ஆகியவை அவதார நோக்கமாகிய
தீயோர் அழிவுக்கும்   நல்லோர்  துயர் நீக்கத்துக்கும் காரணமான
வெற்றிமுகம் தெரிந்ததே யாகும். 
 

(27)