பக்கம் எண் :

 மீட்சிப் படலம்419

37. மீட்சிப் படலம்
 

இராவண  வதம்  முடிந்தபிறகு   சீதாபிராட்டி   சிறையிலிருந்து
மீண்டதையும்,   மூவரும்   வனவாசம்  முடிந்து   அயோத்திக்குத்
திரும்பியதையும் கூறும் பகுதியாதலின் மீட்சிப்படலம் எனப் பெற்றது.
 

இராமன் இராவணற்குரிய  இறுதிக்  கடன்களைச்  செய்து முடித்த
வீடணனுக்கு ஆறுதல் கூறுகிறான். இலக்குவனை வானர வீரர்களுடன்
சென்று  வீடணனுக்கு  முடி  சூட்டச்  செய்கிறான்.   வீடணனுக்கு
நீதிகளை  எடுத்துரைக்கிறான்.  சீதைக்கு  நற்செய்தி  சொல்லிவர 
அனுமனை  அனுப்புகிறான். அனுமனால்  செய்தி  அறிந்த  சீதை
மகிழ்கிறாள்.  அனுமன்  அரக்கியரைத்  தண்டிக்க  விரும்ப
சீதை அதை மறுத்துரைக்கிறாள்.
 

இராமன் வீடணனைச் சீதையைச் சீரொடும் அழைத்து வா என்று
அனுப்புகிறான். இருந்தவாறே வருவேன்  என்றுரைத்த  பிராட்டியை
இராமன் ஆணையைக்  கூறி  அலங்கரித்து வரச் செய்து  அழைத்து
வருகிறான். இராமனது அழகுத் திருமேனி கண்ட சீதை அனுமனைப்
பாராட்டி  இராமனை  வணங்கி  பிரிவினால்  உளதாகிய  ஏக்கம்
நீங்கப்  பெறுகிறாள்.  சீதையை  இராமன்  கடிந்துரைத்து தீயிடைப்
புகும்படி  செய்விக்கிறான்.  சீதை  எரியிடை  விளங்கலும அக்கினி
தேவன் முறையீடும், இராமனுக்கு அக்கினிக்  கடவுள் பிராட்டியின்
கற்பின் மாட்சியை அறிவித்தலும் நிகழ சீதையை  இராமன் ஏற்றுக்
கொள்கிறான்.   பிரமன்  சிவன் ஆகியோர் இராமன பரம்பொருள்
என்பதை   அவனுக்கு   உணர்த்துகின்றனர். தயரதன வருகிறான்.
இராமனோடு உரையாடி  மகிழ்கிறான்.   சீதையைத்   தேற்றுகிறான்.
இலக்குவனைப் பாராட்டுகிறான். இராமனால் கைகேயிபால் கொண்ட
கோபம் தணிந்து சுவர்க்கம் திரும்புகிறான். தேவர்கள்  இராமனுக்கு
வரம்  கொடுக்கின்றனர்.  அரக்கர் கோமான்  வீடணன்  கொணர்ந்த
புட்பக  விமானத்தில் அனைவருடனும் ஏறி அயோத்திக்கு இராமன்
புறப்படுகிறான். பரத்துவாச  முனிவனது  உபசரிப்பை  இடையில்
இராமன் ஏற்கிறான்.  ஆச்சிரமத்தில்  தங்கிய  இராமன்  அனுமனைப்
பரதனிடம் அனுப்புகிறான்.
 

இராமன் வாராமையால் துன்புற்ற பரதன் எரிபுக எண்ணுகிறான்.
எரிபுகத்  துணியும்  பரதனைக்  கோசலைத்  தாய்   தடுக்கிறாள்.
அப்போது  அனுமன்  தோன்றி நெருப்பைக் கையால் அணைக்கிறான்.
இராமனது அடையாள  மோதிரம் காட்டி   இராமன்   வருகையை
அறிவிக்கிறான். பரதன்  மகிழ்கிறான்.   பரதன் கேட்க   அனுமன்
தன் வரலாற்றையும்