பக்கம் எண் :

600யுத்த காண்டம் 

38. திருமுடி சூட்டு படலம்
 

இராமபிரான் இலங்கையிலிருந்து மீண்டு அயோத்தியை அடைந்து
திருமகுடம் தரித்துக் கொண்டதைக் கூறும் படலம். திருவபிடேகப் 
படலம் எனவும் பிரதிகளில் காணப்படுகிறது.
 

இராமன் தம்பியரோடு அரச கோலம் கொள்ளுதல்
 

10290.

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி, 

வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, 

மற்றைத்

தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர், 

உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 

 

நம்பியும்- இராமபிரானும்;  பரதனோடு   -   (தவமிருந்த);
பரதனோடும்,   மற்றைத்    தம்பியரோடு    -     மற்றைத் 
தம்பியர்களோடும் தானும்  -  தானுமாக;   நந்தி   அம்பதியை
நண்ணி 
  -   நந்திக்  கிராமமாகிய அழகிய நகரத்தை அடைந்து;
வம்பு இயல் சடையும்  மாற்றி - நறுமணம் கமழ்கின்ற சடையை
நீக்கி;   மயிர்வினை  முற்றி - மயிர் கழிக்கும் செயலை முடித்து;
தண்புனல்  படிந்த  பின்னர்  -  குளிர்ந்த நீரில் குளித்த பிறகு;
உம்பரும் உவகை கூர
  -  தேவர்களும்  மகிழ்ச்சி கொள்ளுமாறு;
ஒப்பனை ஒப்பச் செய்தார்- அழகு நலன்களைப் பொருந்துமாறு
செய்யலாயினர். 
 

(1)
 

10291.

நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை 

நீங்கி,

குருதி கொப்பளிக்கும் வேலோன் கொடி மதில் 

அயோத்தி மேவ,

சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள்  

பூண்டு,

பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணித் 

தேரின் ஆனான்.*

 

குருதி கொப்பளிக்கும் வேலோன்- இரத்தம் பொழியும்
வேற்படையாளனாகிய இராமன்; நிருதியின் திசையில் தோன்றும்