பக்கம் எண் :

 கதைக் குறிப்புகள்751

கதைக் குறிப்புகள்
  

1. கண்ணன் குருந்தொசித்த வரலாறு... (26)
 

கண்ணனை மணக்க   எண்ணிய   பதினாயிரம்   இயக்கியர்
துவாரகையில் கோபியராகப் பிறந்து,   அங்குப்  பிறந்து வளரும்
கண்ணனோடு பல லீலைகளைச் செய்து வருகின்றனர். ஒரு நாள்
அவர்கள்   கண்ணனோடு  நீர் விளையாடியபோது, அவர்களின்
ஆடைகளைக்  கவர்ந்து யமுனைக் கரையில் இருந்த குருந்த மரக்
கிளைகளில்   தொங்கவிட,  அச்சமயம்    பார்த்து அங்கு வந்த
சகோதரன் பலராமனைக் கண்டமையாலும், ஆயர்குலப் பெண்கள்
தங்களின் ஆடைகளைத் தருமாறு வேண்டிக் கொண்டமையாலும்
கண்ணன் குருந்த மரத்துக் கிளைகளை வளைத்து அவர்தம் 
ஆடைகள் அவர்கட்குக் கிடைக்குமாறு செய்ததோடு தானும் 
வேறு வழியில் கரையேறுகிறான்.
 

2. கண்ணன் மருதொசித்த வரலாறு (26)
 

குழந்தைப் பருவத்துக் கண்ணன் தாங்க வியலா அளவுக்குக்
குறும்புகளைச் செய்வான். தானே அக்குறும்புகட்கு ஆட்பட்டும்
பிறர் வாயிலாகவும் அறிந்த அன்னை யசோதை சிறு தாம்பினால்
கண்ணனின் இடுப்பில்  கட்டி மறுமுனையால்  அவனை உரலில்
இறுகப் பிணித்தாள். கட்டுண்ட  கண்ணன்  உரலை  இழுத்துக்
கொண்டே சென்று முற்றத்தில் வளர்ந்து   நின்ற  மருதமரங்கள்
இரண்டின் இடையில் செல்ல, உரல் இரண்டு மருத  மரங்கட்கும்
இடையில் சிக்கியது. உரலை இழுப்பது போன்று அந்த  இரண்டு
மருத மரங்களையும் கண்ணன் சாய்த்தான். அம்மருத   மரங்கள்
இரண்டும்   இரண்டு கந்தருவர்களாகிக்   கண்ணனின்  கழலடி
வணங்கினர்.   அவர்கள் மதுவின்   மயக்கத்தால் ஆடையின்றி
நாரதர் வருவதையும்  கருதாது நீர்   விளையாட்டில்   ஈடுபட்டு
இருந்த   நளகூபரன்    மணிக்கிரீவன்   என்ற    பெயருடைய
குபேரனின் பிள்ளைகளே, அவ்விருவரும். அவர்தம் செயல்களால்
அருவறுப்புற்று  வெகுண்டெழுந்த   நாரதரின் சாபத்தால்  மருத
மரங்களாய்   நின்ற அவர்கள்  கண்ணனின் கழலடியால் முந்தை
உருவங்களைப் பெற்று மகிழ்ந்தனர்.