பக்கம் எண் :

788யுத்த காண்டம் 

குலிசன்

:

அரக்கன்.

குவலையாசுவன்:

தசரதன் முன்னோன். துந்து என்பவனைக்
கொன்றவன்.

கூனி:

மந்தரை. கைகேயியின் தோழி.

கேசரி:

அஞ்சனையின் கணவன். அநுமனின் தந்தை.

கைகேசி:

தசரதன் தேவி. பரதனின் தாய்.

கைடபன்:

கயிடன். திருமாலைப் பகைத்து அழிந்த ஓர்
அரக்கன்.

கோசலை :

தசரதன் முதல் தேவி. இராமன் தாய்.

கௌசகி:

கோசிகரின் (விசுவாமித்திரர்) உடன்பிறந்தவள்.
பின்பு நதியாக மாறியவள்; கோசி.

கௌதமர:

அகலிகையின் கணவர்.

சகரர்:

சாகரர் எனப்படுவார். சகரனது இரண்டாவது
மனைவியிடம் பிறந்த ஆயிரம் மக்கள்.

சகரன்:

'விஷத்தோடு பிறந்தவன்' எனப் பொருள்படும்.
அயோத்தி வேந்தன். விதர்ப்பதேசத்து அரசன்
மகள் விதர்ப்பை எனப்படும் கேசினியை
மணந்தவன்.

சகோத்ரன்:

வானரப்படைத் தலைவன்.

சங்கன் :

சங்கு போன்ற நிறமுடையவன். வானரச் சேனைத்
தலைவன்.

சடாயு:

அருணனின் மகன். கழுகரசன். பல மயிர்கள்
சேர்த்துத் திரித்த சடைபோன்ற ஆயுளையுடையவன். வைணவர்கள் இவனைப்
'பெரிய உடையார்' எனப் போற்றுவர்.

சடையப்பர்:

திருவெண்ணெய்நல்லூர் வள்ளல். கம்பரை
ஆதரித்தவர்.

சத்துருக்கனன்:

தசரதன் மகன். தாய் சுமத்திரை.

சதவலி:

வானரத்தலைவன். முகத்தில் நூறு மடிப்புகளை
உடையவன். வடதிசையில் சீதையைத் தேடச்
சென்றவன்.

சதானந்தன்:

கௌதம முனிவரின் புதல்வர். தாய் அகலிகை
சனகரின் குலகுரு.