பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்65


கலிவிருத்தம்
யூகி உருமண்ணுவாவிற் குரைத்தல்

147. அண்ண றன்னிலை யறிந்த யூகியும்
தி்ண்ணி தின்னியல் செய்கை யென்றுரு
ண்ணு வாவினை மன்ன னண்டையில்
எண்ணுங் காரிய மீண்டுச் செய்கென்றான்.

(இ - ள்.) உதயணகுமரன் அமைச்சர்களால் வெளிநிலை யெய்தியது தெரிந்த யூகி, உருமண்ணுவாவினைக் கண்டு இனி நீ திட்பமுற நிகழ்த்தவேண்டிய செயல் இஃதாம் என்று கூறி இனி நீ உதயணன்பாற் சென்றுயாம் ஈண்டு ஆராய்ந்து துணிந்த செயலை இச் செவ்வியிற் செய்யக் கடவை என்று பணித்தான் என்க. (27)

அமைச்சர்கள் ஆராய்ந்து துணிந்தபடி வயந்தகன்
உதயணனுக்குக் கூறுதல்

148. தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான்
துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்
மன்னற் குறுதி மறித்தினிக் கூறும்
பொன்னடி, வணங்கிப் புரவலன் கேட்ப.

(இ - ள்.) அமைச்சர்கள் தம்முள் ஆராய்ந்து துணிந்தபடி செயலின் கண் ஈடுபட்டு நல்லமைச்சனாகிய தனது பெருந்தகைமைக் கேற்ற மெய்யுணர்ச்சியுடையவனும் பகைவர் அறிதற்கரிய சூழ்ச்சித் திறனுடையானும் உதயணன் தோழனுமாகிய வயந்தகன் உதயணனுக்கு உறுதி பயக்கும் காரியத்தை அம்மன்னன் இனிது கேட்கு மாற்றாலே செவ்வியறிந்து பொன்னடி வணங்கிக் கூறுவான் என்க. (28)

இதுவுமது

149. வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில்
இற்றவர்க் காட்டு மியல்பின னூலுரை
கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன்
தத்துவ முனியுள னாமினிச் சார்வோம்.

(இ - ள்.) பெருமானே! வெற்றி தரும் வேலேந்திய மகத மன்னன் நாட்டிலே மெய்ந் நூல்களை ஐயந்திரிபறக் கற்று வல்லுந னாயவனும் நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்னும் மும்மணியும் கைவசப் பெற்றவனும் ஆகிய தத்துவந்தேர் துறவி யொருவனுளன். அவன் இறந்த மாந்தரை மீண்டும் உயிருடன்

உத-5