வயந்தகன் காகதுண்ட முனிவனுக்குச்
சூழ்ச்சி கூறுதல்
155. காமநற் கோட்டஞ் சூழக் கனமதி லிலங்கும்
வாயிற்
சோமநற் றாப தர்கள் சூழ்ந்தமர் பள்ளி
தன்னில்
நாமநல் வயந்த கன்னும் நன்கறி காக துண்ட
மாமறை யாளற் கண்டு வஞ்சகஞ் செப்பி
னானே.
(இ - ள்.) அவ்விராசகிரியத்தின்
புறநகரின்கண் ணமைந்த காமன் கோயிலைச் சூழ்ந்து
பொன்மதில் திகழ்கின்ற வாயிலின் மருங்கே
அமைதியுடைய துறவோர் குழுமியுறைகின்ற பள்ளியின்
கண் வயந்தகண் அறமுணர்ந்த ‘காகதுண்டகன்’
என்னும் பெரிய வேதங்களையுணர்ந்த
முனிவனொருவனைக் கண்டு தம்முடைய சூழ்ச்சியினைத்
தெரிவித்தனன் என்க. சோமம் - அமைதி. (5)
காகதுண்டகன் உதயணனைக் கண்டு கூறுதல்
156. திருநிறை மன்னன் றன்னைச்
சீர்மறை யாளன் கண்டே
இருமதி யெல்லை நீங்கி
யிப்பதி யிருப்ப வென்றும்
தருவனீ யிழந்த தேவி
தரணியுங் கூடவென்ன
மருவியங் கிருக்கு மோர்நாண்
மகதவன் றங்கை தானும்.
(இ - ள்.) வயந்தகன் அறிவித்தபடியே
சிறந்த அக்காகதுண்டகன் என்னும் மறைமுனிவன்
செல்வமிக்க உதயண மன்னனைக் கண்டு அரசே! நீ
இரண்டு திங்கள் முடியுந்துணையும் இறந்தாட்கு
இரங்குதல் நீங்கி இந்நகரத்தே நோன்பாற்றி
இருக்கவேண்டும் என்றும், அங்ஙனம் இருப்ப, யான் நீ
இறந்த மனைவியையும் நாட்டினையும் என் வித்தையால்
நினக்கு மீட்டுத் தருவேன் என்றும்
அறிவித்தமையாலே அம்மன்னவனும் அவன் கூற்றைப்
பொருந்தி அங்கிருக்கும்பொழுது ஒரு நாள்
மகதமன்னன் தங்கை, என்க. (6)
பதுமாபதியும் உதயணனும்
காட்சியெய்துதல்
157. பருவமிக் கிலங்குங் கோதைப்
பதுமைதே ரேறி வந்து
பொருவில்கா மனையே காணப்
புரவலன் கண்டு கந்து
|