பகையரசர் ஐயுற்று ஓடுதலும் மீண்டுங்
கூடுதலும்
168. உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின்
முரியுஞ் சேனை முயன்றவ ரோடலிற்
றெருளி னர்கூடிச் சேரவந் தத்தினம்
மருவி யையம் மனத்திடை நீங்கினார்.
(இ - ள்.) உருமண்ணுவா முதலியோர்
பேசுகின்ற கரப்பு புரைகளை அறிந்து இவர்
வணிகரல்லர், பகைமன்னன் மறவரே என்றஞ்சி
மனங்கலங்கி அப்பகைப்படை மறவர் தாம்
உயிர்தப்ப முயன்று ஓடுதலாலே அப்பகை மன்னர்கள்
மறுநாள் ஓரிடத்தே கூடி வந்து அவர் பகைவரே
யென்றுணர்ந்தவராய் ஐயம் நீங்கினர் என்க. (18)
இதுவுமது
169. இரவு பாசறை யிருந்தவர் போனதும்
மருவிக் கூடியே வந்துடன் விட்டதும்
விரவி யொற்றர்கள் வேந்தர்க் குரைத்தலின்
அரசன் கேட்டுமிக் கார்செய லென்றனன்.
(இ - ள்.) இ்னி முன்னாளிரவின்கண்
பாசறையிலிருந்த பகை மன்னர் படையுடன் ஓடிய
செய்தியையும் மீண்டும் ஒருங்கு கூடி வந்து
மற்றோரிடத்தே தங்கிய செய்தியையும் அப்பகைப்
படைகளிலே மாறுவேடத்திற் கலந்து ஒற்றிவந்த
ஒற்றர்கள் தருசக மன்னனுக்குக் கூற, அது கேட்ட
அம்மன்னவன் மகிழ்ச்சி மி்குந்து அவ்வாறு அவரை
ஒட்டிய செயல் யார் செயல் என்று அவ்வொற்றரை
வினவினன் என்க. (19)
ஒற்றர் அங்ஙனம் செய்தது உதயண மன்னன்
எனலும்
உருமண்ணுவா தருசகனைக் கண்டு கூறலும்
170. வார ணிக்கழல் வத்தவன் றன்செயல்
ஓரணி மார்ப னுருமண்ணு வாவுமிக்
கேரணி யரச ருக்கியல் கூறலும்
தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தான்.
(இ - ள்.) அவ்வொற்றர்கள்
அச்செயல் வார்கழல் கட்டிய அடிகளையுடைய
வத்தவமன்னனாகிய உதயணன் செயலே என்று கூறப்,
பின்னர் அணிகலனணிந்த உருமண்ணுவாவும் அழகிய
அணிகலனணிந்த தருசகனைக் கண்டு மிகவும் ஆங்குற்ற
நிகழ்ச்சியினை அறிவிக்கவும்
வெற்றிமாலையையுடைய அவ்வேந்தன் தன்னுள் மிகவும்
மகிழ்ந்தனன் என்க. ஓர்: அசைச்சொல். என்று கூற
என வருவித்தோதுக. (20)
|