உதயணன் போரில் விழுப்புண் பட்ட
மறவர்க்கு ஆவன செய்து பின்';
திருமுடி சூடி ஆட்சி
செலுத்துதல்
185. படுகளத்தி னெந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன்
இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின்
தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட
முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள்.
(இ - ள்.) இனி உதயண மன்னன் வாகை
சூடி அரண்மனை புக்கபின்னர்ப் போர்க்களத்திலே
விழுப்புண் பட்ட மறவர்க்கெல்லாம் பலவாகிய
கிழிகளிலே நெய்யூட்டி இடுகின்ற மருந்து பூசும்
பொருட்டு வேண்டிய பொருள்களை வழங்கி அவர்கட்கு
முகமன் கூறிய பின்னர் வீரக் கழல் கட்டிய வேற்று
நாட்டு மன்னரெல்லாம் சூழ்ந்து தன் திருவடிகளிலே
வீழ்ந்து வணங்காநிற்பத் திருமுடிசூட்டு
விழாக்கொண்டு தனது அரசியலை யாவர்க்கும் செவ்வி
எளியனாய் முகமலர்ந்து காட்சியீந்து செங்கோல்
செலுத்தும் நாளில் என்க. (35)
மூன்றாவது மகதகாண்டம் முற்றும்.
|