பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்83


நான்காவது

வத்தவ காண்டம்

(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)

உதயணகுமரன் திருவோலக்க மண்டபத்தில் வீற்றிருத்தல்

186. மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப்
பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாச னத்தில்
தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையி னீழல்
மின்சொரி தரள வேந்தன் வீற்றி ருந்த போழ்தின்.

(இ - ள்.) ஒளி வீசுகின்ற கதிர்களையுடைய வேலேந்திய படைத்தலைவர்கள் தனது மாபெருஞ் சிறப்புடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கவும், விருப்பமுண்டாக்கும் பொற்காம்புடைய சாமரைகள் இரட்டவும், சினமிகுகின்ற அரிமான் சுமந்த அரசு கட்டிலின்மிசை குளிர்ந்த ஒளியைப் பொழிகின்ற கதிர்களையுடைய முத்தாலியன்ற வெள்ளிய அழகிய குடையினது நீழலிலே ஒளி வீசும் முத்தமாலை அணிந்த உதயணவேந்தன் எழுந்தருளிய பொழுதில் என்க. (1)

உதயண மன்னன் அளியும் தெறலும்

187. மாற்றலர் தூதர் வந்து

வருதிறை யளந்து நிற்ப

ஆற்றலர் வரவ வர்க்கே

யானபொன் றுகில ளித்தே

ஏற்றநற் சனங்கட் கெல்லா

மினிப்பொரு ளுவந்து வீசிக்

கோற்றொழி னடத்தி மன்னன்

குறைவின்றிச் செல்லு கின்றான்.

(இ - ள்.) பகை மன்னவருடைய தூதர்கள் வந்து தனக்கு வரவேண்டிய திறைப் பொருளை அளவாநிற்பவும், தன் படை மறவர் வந்துழி அவர்க்கெல்லாம், பொன் ஆடை முதலிய பரிசுகளை வழங்கியும், தன்பால் வந்து இரந்த இரவலர்கட்கெல்லமாம் அவர்க் இனியவாம் பொருள்களை மகிழ்ந்து வழங்கியும், தன் கடமையாகிய செங்கோன்மைத் தொழிலைச் சிறப்புற நடத்தியும் உதயணமன்னன் யாதொரு குறையுமின்றி இனிதே வாழ்வானாயினன் என்க. கினிய - ஈறுகெட்டது. (2)