பக்கம் எண் :


209

2. இந்திர காண்டம்
 

        [இந்திரவுலக நிகழ்ச்சி கூறுகின்றமையின் இப்பகுதி
             ''இந்திர காண்டம்'' என்னும் பெயர்த்து.]

            சிவசத்தி வணக்கம்

 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  
412.

இம்மை அம்மை மறுமை என்ன
   இசைத்து மாமறை கூறிய
மும்மை யும்தெளி வுற்றுநெஞ் சினின்
   முக்கு றும்பும்அ றுத்திடும்
செம்மை அன்பர் மனத்து வைகிய
   தெய்வ நாயகர் தேவிமற்
றெம்மை ஆளுடை அம்மை தாள்கள்
   இரண்டும் ஏத்தி இறைஞ்சுவாம்.

     (இ - ள்.) இம்மை அம்மை மறுமை என்ன இசைத்து மாமறை
கூறிய மும்மையும் - இப்பிறப்பு முற்பிறப்பு வருபிறப்பு என்று வகுத்துச்
சிறந்த வேதங்கள் கூறிய மூன்று பிறவிகளையும், தெளிவுற்று - தெளிந்து,
நெஞ்சினின் முக்குறும்பும் அறுத்திடும் - மனத்திலுள்ள முக்குற்றங்களையும்
நீக்குகின்ற, செம்மை அன்பர் மனத்து வைகிய - செம்மை நெறியிற் சிறந்த
அன்பு வைக்கும் அடியார் மனத்தில் தங்குகிற, தெய்வ நாயகர் தேவி
-தெய்வநாயகராகிய சிவபெருமானின் தேவி, எம்மை ஆளுடை அம்மை -
எம்மை அடிமையாகக் கொண்டுள்ள சத்தியின், தாள்கள் இரண்டும் -
திருவடி இணையை, ஏத்தி இறைஞ்சுவாம் - துதித்து வணங்கக்கடவோம்.

     மும்மையும் உம்மை முற்றும்மை; மாமறை: உரிச்சொற்றொடர்; மூன்று
+ குறும்பு = முக்குறும்பு; முக்குறும்புகள் - ஆணவம், மாயை, கன்மம்
என்ற மும்மலங்கள். மற்று : அசை.
                                                     (1)

 
         கவிக் கூற்று
413. கொற்ற வாசவன் முன்வ சிட்டன்
   உரைத்ததற் கெதிர் கோசிகன்
சொற்ற வாறு முடிக்க வன்மை
   தொடங்கி நாடு விலங்கினால்
செற்ற வாறும் உருத்து வண்திரி
   சங்கு மைந்தன் எழுந்துகான்
உற்ற வாறு நிகழ்ந்த வாறும்
   உணர்ந்த வாறு விளம்புவாம்.