[கௌசிகன்
வஞ்சனையைக் குறிக்கும் பகுதி]
|
கவிக்
கூற்று
கலி விருத்தம் |
459. |
திருந்து
செஞ்சொற் செழுமறைக் கௌசிகன்
பொருந்து நீர்க்கடற் பூதலம் சார்ந்துபண்
டருந்த வம்புரி சாலை அனைந்துபுக்
கிருந்த னன்பின் நிகழ்ந்த தியம்புவாம். |
(இ - ள்.)
திருந்து செஞ்சொல் செழுமறைக் கௌசிகன் -
திருத்தமான செவ்விய சொற்களைக் கொண்ட பொருள் நிரம்பிய
வேதங்களைக் கற்ற விசுவாமித்திரன், பொருந்து நீர்க் கடல் பூதலம்
சார்ந்து - விண்ணுலகி னின்றும் நீர் பொருந்திய கடலாற் சூழப்பட்ட
பூமியை அடைந்து, பண்டு அருந் தவம்புரி சாலை அணைந்து - முன்பு
அரிய தவஞ்செய்த தவப்பள்ளியை அடைந்து, புக்கு இருந்தனன் -
அதனுட் புகுந்து இருந்தான், பின் நிகழ்ந்தது இயம்புவாம் - பின் நிகழ்ந்த
நிகழ்ச்சியைக் கூறுவாம்.
செஞ்சொல், செழுமறை: பண்புத்தொகைகள், மறைக்கௌசிகன்,
மறைகளையுணர்ந்த கௌசிகன்; இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்கதொகை. நீர்க்கடல் என்பதும் அது.
(1)
|
நெஞ்சத்தில்
வஞ்சனை யெண்ணுதல் |
460. |
செவ்வி
யன்றனைத் தீயவன் என்றியாம்
வெவ்வி யற்பட விண்ணவர் முன்புகல்
அவ்வி யத்தைமெய் ஆக்கும் அரும்திறம்
எவ்வி யற்றென் றிதயத்தில் எண்ணினான். |
(இ
- ள்.) செவ்வியன் தனை - நல்லவனாகிய அரிச்சந்திரனை,
தீயவன் என்று யாம் வெவ் இயல் பட - கெட்டவன் என்று நாம்
கொடுமையாக, முன் பகல் அவ்வியத்தை - தேவர்களுக்கு முன்சொன்ன
அழுக்காற்று மொழியை, மெய் ஆக்கும் அருந்திறம் - உண்மையென்று
மெய்ப்பிக்கும் அருந்திறச்செயலை, எ இயற்று என்று -
எவ்வியல்புடையதாயுள்ளது (அரிய செயலே) என்று, இதயத்தில்
எண்ணினான் - மனத்தில் ஆராய்ந்தான்.
என்று
+ யாம் = எறியாம் - குற்றியலிகரம்; இயற்றென்று தொகுத்தல்:
திறம்; ஆகுபெயர். ''அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்,
கேடும் நினைக்கப் படும்.'' அவ்வியம் - அழுக்காறு.
|