(இ
- ள்.) கோடி கோடி கொலை வேடர் - எண்ணற்ற கொலைத்
தொழில் புரிகின்ற வேடர்கள், பணிலம் ஒத்த பலகறை நிரைத்த பல
கவசம் இட்டு-சங்குகளுக்கு ஒப்பான சோகிகளை வரிசையாக நிரப்பிக்
கோத்து அணிசெய்யப்பெற்ற பல சட்டைகள் அணிந்து, வெகு துவசராய் -
பல கொடிகளையுடையவராய், அணி மயிர்க் கரடி - அழகிய மயிர்
நிறைந்த உடலையுடைய கரடிகள், மத கரித் திரள் - மதநீர் பாயும்
யானைக்கூட்டங்கள், புலி முதல் கிரியின் அளவவாய் - புலி முதலாகப்
பன்றி ஈறாகவுள்ள, கணில் எதிர்த்தவைகள் - கண்ணில் எதிர்ப்பட்ட
மிருகங்களையும், கரவில் உற்றவைகள் - மறைவிடங்களில்
இருக்கின்றவற்றையும், துணி படர் கருவி எறியும் அக்குணில் எடுத்து -
துண்டங்களாகும்படி கோபித்து எறிகின்ற அக்குறுந்தடிகளை எடுத்து,
உலகம் நிறைய வந்தனர்கள் - நாடெல்லாம் நிரம்பும்படி வந்தார்கள்.
கணில்:
கண்ணில் என்பதன் தொகுத்தல்,
ஏகாரம் :
ஈற்றசை, பணிலம் - சங்கு. கரடி புலி முதலியன
கண்ணில் கண்டாலும் மறைந்திருந்தாலும் அவற்றை யெறிந்து
கொல்லக்கூடிய குணில் கொண்டு வந்தனர் எனக் குணிலைச் சிறப்பித்தனர்.
இதனால் வேடர் சிறப்பு விளங்கிற்று.
(9)
530. |
வென்றி
மத்தக மதக்க ளிற்றுநெடு
வெண்மருப் பில்விளை முத்தமும்
குன்றி முத்துநிரை ஒக்கவைத் தகன
கோவை மார்பினிடை தாழவே
பன்றி யிற்பரு மருப்பி னைத்தொழில்
பயின்ற கண்டிகை அணிந்துயிர்
கொன்று தின்பது விரும்பி வந்தனர்
குடார வேடரொரு கோடியே. |
(இ - ள்.)
வென்றி மத்தக மதக் களிற்று நெடு வெண் மருப்பில் -
வெற்றியையுடைய மத்தகமும் மதமும் உடைய யானைகளின் நீண்ட வெண்
மருப்பில், விளை வெண் முத்தமும் - விளைகின்ற வெண்மையான
முத்துகளும், குன்றி முத்தும் - குன்றி மணியும், நிரை யொக்கவைத்த கன
கோவை - வரிசையாக ஒன்றுபோல வைத்துக் கோத்த கனமான மாலைகள்,
மார்பினிடை தாழ - மார்புகளில் தாழ்ந்து தொங்க, பன்றியின் பரு மருப்பு
இணைத்து எழில் பயின்ற கண்டிகை அணிந்து - பன்றியின் பருமையான
கொம்புகளைச் சேர்த்து அழகு ஓழுகத் தொடுத்த கண்டிகைகளை
அணிந்து, உயிர் கொன்று தின்பது விரும்பி - உயிர்களைக் கொன்று
தின்பதையே விரும்பி, குடார வேடர் ஒருகோடி - கோடரிகளைக் கையில்
கொண்ட வேடர் எண்ணற்றவர். வந்தனர் - வந்தார்கள்.
|