பக்கம் எண் :


372

தூவியினாலும், அனிச்சத்தாலும் - அனிச்சமலராலும், பஞ்சாலும் பதை
பதைக்கும் பதத்தாட்கு - பஞ்சினாலும் பொறுக்காது பதைபதைத்து
வருந்துகின்ற பாதத்தினையுடைய சந்திரமதி என்னும் அரசிக்கு, கால்
நடையோ பலித்தது என்பார் - காலால் நடத்தலோ வந்து விளைந்தது
என்பார்கள், செஞ்சாலிக் கோசலமும் இராசகுல வள நாடும் தேவர் நாடும்
அஞ்சாமற் காத்து அருள் எம் பெருமானுக்கு - சிவந்த நெல் விளையும்
கோசலநாட்டையும் மற்ற அரசர்களுடைய வளநாடுகளையும் தேவர்
நாட்டையும் அஞ்சாமல் காத்து அருளுகின்ற எங்கள் அரசனுக்கு, இதுவோ
வந்து அடுத்தது என்பார் - இந்த நிலையோ வந்து சேர்ந்தது என
வருந்தினார்கள்.

     சந்திரமதியின் பாதங்கள் அன்னச்சிறகு, அனிச்சப்பூ, பஞ்சு இவற்றிற்
பட்டாலும் நடுங்கும். அத்தகைய மெல்லிய பாதங்கள் கல்லினும்
முள்ளினும் மிதித்துச் செல்லும்படியாயிற்றே என்று புலம்பினர். அரசனுக்கு
இந்த விதி வந்ததே என்றும் நொந்தனர் என்க.
                                                     (5)

 
758. கச்சைக்குத் திளமுலைச்சந் திரவதிதன் கணவனொடு
   கழுமி ஏகக்
கொச்சைக்கு வலயமயில் கொற்றவனை விட்டுமுனிக்
   கூட்டம் வேட்டாள்
இச்சைக்கி தம்பேசி ஈந்தாரைப் பாராட்டி
   யீவார் தம்பாற்
பிச்சைக்கு வந்தவரோ பெண்ணுக்கு மணவாளப்
   பிள்ளை என்பார்.

       (இ - ள்.) கச்சைக் குத்து இள முலை சந்திரவதி தன்
கணவனொடு கழுமி ஏக - கச்சினைக் குத்துகின்ற இளமுலையினையுடைய
சந்திரமதி தன் கணவனுடன் சேர்ந்து செல்ல, கொச்சைக் குவலய மயில்
கொற்றவனை விட்டு முனிக் கூட்டம் வேட்டாள் - கீழ்மைக்குணம் உள்ள
இந்நிலம் என்னும் மயில்போன்ற பெண் அரசனை விட்டு நீங்கி முனிவர்
கூட்டத்தை விரும்பினாள், இச்சைக்கு இதம் பேசி - ஒருவனுடைய
விருப்பத்துக்கு ஏற்றபடி இன்மொழி பேசி, ஈந்தாரைப் பாராட்டி -
கொடுத்தவர்களைப் பாராட்டி, ஈவார் தம்பால் பிச்சைக்கு வந்தவரோ -
கொடுக்கின்றவரிடத்துப் பிச்சைகேட்க வந்தவரோ, பெண்ணுக்கு மணவாளப்
பிள்ளை என்பார் - பெண்ணுக்கு மணவாளனாதற்கு உரியவர் என்று
கூறுவார்.

     கழுமி - சேர்ந்து. 'பிச்சைக்கு வந்தவனோ பெண்ணுக்கு
மணவாளன்' என்னும் பழமொழி எடுத்தாளப்பட்டுள்ளது. பூமியென்னும்
பெண் அரிச்சந்திரனை விட்டு நீங்கினள். கோசிகமுனிவனோடு கூடினள்.
வேள்விக்குப் பொன் கேட்டு வேந்தனிடம் வந்த முனிவனுக்கு அரசாட்சி
கிடைத்தது என்ன விந்தை! பிச்சைக்கு வந்தவனுக்குப் பெண் கிடைத்தது
போலவல்லவோ இருக்கிறது என்றும் வருந்தினர்.
                                                     (6)