பக்கம் எண் :


437

முன்னையூழ் விதியி னாலே முந்தயான் றழலில் வீழ்வேன்
பின்னைநீர் பிழைமி னென்றான் பெருகுநீ ரருவிக் கண்ணான்.

     (இ - ள்.) அன்னை தான் ஏக - தாயாகிய சந்திரமதி சென்ற
போது, மைந்தன் அலறிச் சென்று அடி வீழ்ந்து - மைந்தனாகிய
தேவதாசன் அலறிக்கொண்டு சென்று அடிகளில் வீழ்ந்து, அன்னாய்
என்னை நீர் பயந்தீர் உங்கள் இடுக்கணுக்கு உதவ அன்றோ -
அன்னையே ! என்னை நீங்கள் பெற்றெடுத்தது உங்கள் துன்பத்தை
நீக்குவதற்கு அன்றோ, முன்னை ஊழ் விதியினாலே முந்த யான் தழலில்
வீழ்வேன் - முன்னைய ஊழ்வினையின்படி யான் முன்னால் நெருப்பில்
வீழ்வேன், பின்னை நீர் பிழைமின் என்றான் வெருகு நீர்
அருவிக்கண்ணான் - பிறகு நீர் இறந்தால் தவறில்லை என்று கூறித் தன்
கண்களார் கண்ணீர் சிந்தி அழுதான்.

     அருவிபோல் கண்ணீர் சிந்தியதால், 'பெருகுநீர் அருவிக்கண்ணான்'
என்றார். மைந்தனைப் பெறுவது தந்தை தாயர்க்கு துன்பம் வரும் போது
உதவி செய்வதற்காகவல்லவர்? அம் முறையில் யான் உதவி செய்கின்றேன்;
நீங்கள் விழவேண்டா' என்று தடுத்தான் தேவ தாசன் என்பது.
                                                   (148)

 
901. தையலாள் அச்சொற் கேட்டுத் தனையனைத் தழுவி மோந்து
செய்யவாய்ப் பல்வீழ்ந் தில்லாய் செழுமுலை மறந்தா யல்லை
ஐயவித் துணிவும் இந்த அறிவும்எங் கடுத்த தென்னாக்
கையினான் முகத்தின் மோதிக் கண்ணினீ ரருவி சோர்ந்தாள்.

       (இ - ள்.) தையலாள் அச் சொல் கேட்டுத் தனையனைத் தழுவி
மோந்து - சந்திரமதி தன் மகன் கூறிய மொழிகளைக் கேட்டு அவனைத்
தழுவி உச்சிமோந்து, செய்யவாய் பல் வீழ்ந்தில்லாய் செழுமலை மறந்தாய்
அல்லை - சிவந்த வாயினின்று பல் விழுந்து வேறு பல் முளைத்திலது,
முலைப்பால் குடித்தலையும் மறந்தாய் அல்லை; ஐய இத் துணிவும் இந்த
அறிவும் எங்கு அடுத்தது என்னா - ஐயனே! இந்தத் துணிவும் அறிவும்
உனக்கு எவ்வாறு வந்து பொருந்தியது என்று, கையினால் முகத்தின்
மோதி கண்ணின் நீர் அருவி சோர்ந்தாள் - கையினால் முகத்திலே
மோதிக்கொண்டு கண்ணீர் அருவிபோல் சிந்த அழுதாள்.

     தேவதாசன் கூறியது கேட்டுச் சந்திரமதி இவ்வளவறிவு
இளமையிலேயே வந்தது எவ்வாறு என்று சொல்லி யழுதாள் என்பது. பல்
விழுந்து வேறு பல் முளைப்பதும் பால் குடி மறப்பதும் இளமை நீங்கும்
பருவம் என்பது தோன்றிற்று. சந்திரமதி கூறியது புனைந்துரை எனக்
கொள்க.
                                                   (149)

 
902. தெய்தவப் பயத்தி னாலே தோன்றிய செல்வ செய்த
கைதவம் உண்டே னம்மைக் கடுங்கனல் கொல்லு மல்லால்
உய்தக வுதவும் உள்ளம் வருந்தலை யொழிநீ என்னா
மொய்தழ றன்னைச் சென்று முடுகிநின் றினைய சொல்வாள்.