|
(இ
- ள்.) தவளம் திரு தரள நகையும் - வெண்மையான முத்துகள்
போன்ற அழகிய பல் வரிசையும், சிறந்த இரு தனுவைப் பழித்த நுதலும்
- சிறந்த இரண்டு விற்களைப் பழிக்கும்படியான புருவங்களையுடைய
நெற்றியும், பவளத்தை ஒத்த கனி இதழும் - பவழம் போன்றும்
பழம்போன்றும் சிவந்த உதடும், படைத்த விதி பதறி்ப் படைத்தது உளதோ
- உண்டாக்கிய அயன் மனம் பதறித் தவறி இக்கொலையை
விதித்தானோ?, கவளக் களிற் றரசன் - கவளம் உண்ணும்
யானையையுடைய அரசன், உலகத்து உயிர்க்கு உதவு கபடற்று இரக்கம்
உடையோன் - உலகத்து உயிர்களுக்கு உதவி செய்கின்ற வஞ்சனை
இல்லாத இரக்க மனம் உடையவன், இவளைக் கொலக் கருதி இவர்
கைக் கொடுத்த திறம் ஏது என்று இரங்கி அழுவார் - இவளைக் கொல்ல
நினைத்து இந்தச் சுடலை காப்பவரிடம் கொடுத்தது என்ன காரணமோ
என்று இரக்கங்காட்டி அழுவார்கள்.
"இத்துணைச்
சிறந்த அழகியாகப் படைத்த கடவுள் ஆயுளை
நீளமாகப் படைக்க மறந்தான்போலும்!' நம்மரசர் அறநெறி தவறாதவராக
இருந்தும் 'இவளைக் கொலைகாரி! என்று ஆய்ந்து இவர் கையிற்
கொடுத்தது என்ன காரணமோ!" என்றும் கூறிப் புலம்பினர்.
(111)
| 1088. |
வேலைப் பழித்தவிழி
யாளைச் சினத்தரசன்
வெட்டென் றுரைத்த பொழுதே
சாலச் சவங்கள்சுடு கோலில் தடிந்துநனி
தள்ளிக் கொணர்ந்த புலையன்
சீலத்தை யுங்கனக மார்பத்தை யுங்குலவு
திண்டோளை யுங்கண் டிடின்
மாலொப்ப னன்றிமயி லோனொப்பன் அல்லதொரு
மதனொப்பன் என்று மருள்வார். |
(இ - ள்.) வேலைப் பழித்த விழியாளை
சினத்து அரசன்
வெட்டு என்று உரைத்த பொழுதே - வேலையும் பழிக்கும் அழகிய
கண்களை யுடைய இவளைச் சினங்கொண்டு மன்னன் வெட்டு என்று
சொன்ன அப்பொழுதே, சாலச் சவங்கள் சுடு கோலில் தடிந்து -
மிகுதியான பிணங்களைச் சுடுகின்ற கோலினாலே தண்டித்து, நனி
தள்ளிக் கொணர்ந்த புலையன் - மிகவும் வலிவோடு தள்ளிக்கொண்டு
வந்த புலையனுடைய, சீலத்தையும் கனக மார்பத்தையும் குலவு
திண்டோளையும் கண்டிடின் - ஒழுக்கத்தையும் பொன்மயமான
மார்பையும் விளங்கும் திண்ணிய தோளையும் பார்த்தால், மால் ஒப்பன்
அன்றி மயிலோன் ஒப்பன் அல்லது ஒரு மதன் ஒப்பன் என்று மருள்வார்
- திருமாலைப் போலத் தோன்றுகின்றான் அல்லாமலும்
முருகப்பெருமானைப் போலவும் தோன்றுகிறான் மன்மதனைப்போலவும்
தோன்றுகின்றான் என்று ஊர் மக்கள் மயங்குவார்கள்.
'வீரவாகுவின் பணியாளனாக வந்தமர்ந்து இவளைக்
கொண்டு
செல்வோன் ஒரு மன்னன் போலத் தோன்றுகின்றான்! இவன் புலையனுக்கு
ஆளாய் வந்ததும் புதுமை!' என்று மயங்குவார்கள் என்பது கருத்து.
(112)
|