பக்கம் எண் :


59

இச்செய்யுள் குளகம். உம்மைகள் எண்ணும்மைகள். சிறு பண்டி :
பண்புத்தொகை. சிறுமை + பண்டி : ஈறுபோதல்.
                                                     (2)

 
107. நூலும் மார்பமும் நூலிடைத் திகழ்ந்துற நுடங்கும்
தோலும் அங்குலித் தருப்பையும் துளங்குமொண செவியில்
நாலும் யாககுண டலங்களும் நான்மறை நெறிமுக்
கோலும ஏந்திய குடைகளும் குண்டிகைக் கரமும்;

     (இ - ள்.) நூலும் மார்பமும் நூலிடைத் திகழ்ந்து உற நுடங்கும்
தோலும் - முப்புரி நூலும் மார்பும் நூலில் விளக்கமுறப் பொருந்தி
யசைகின்ற மான்தோலும், அங்குலித் தருப்பையும் - விரல்களில்
தருப்பையும், துளங்கும் ஒண் செவியில் நாலும் யாககுண்டலங்களும் -
அசைகின்ற கேள்வியறிவு விளங்கிய காதுகளில் தொங்குகின்ற வேள்வி
செய்பவர் அணிகின்ற குண்டலங்களும். நான்மறை நெறி ஏந்திய
முக்கோலும் குடைகளும் - நான்குவேத விதிப்படி ஏந்தியுள்ள
முக்கோல்களும் குடைகளும், குண்டிகைக் கரமும் - கமண்டலங்கள்
வைத்திருக்கின்ற கைகளும்;

     இச்செய்யுளும் குளகம். உம்மைகள் எண்ணும்மைகள். செவிக்கு
ஒண்மை கேள்வி யறிவினால் உண்டாவதாகும்.
                                                     (3)

 

108. இன்ன கொண்டுள இருடிகள் யாவரும் எய்தி
அன்ன சத்திரம் அணைந்துபுக் கனரயா வுயிர்த்து
முன்னம் வாரிதி ஆர்ப்பெடுத் தாலென முழங்கி
மன்னர் மன்னவன் மாளிகை வாயிலில் வந்தார்.

     (இ - ள்.) இன்ன கொண்டு உள இருடிகள் யாவரும் எய்தி அன்ன
சத்திரம் அணைந்து புக்கனர் அயாவு உயிர்த்து - மேற் கூறப்பட்ட
இத்தகையவற்றைக் கொண்டுள்ள முனிவர்கள் எல்லோரும் அயோத்தியை
அடைந்து அன்னசத்திரங்களை நெருங்கிப் புகுந்து உணவு அருந்திக்
களைப்பு நீங்கி, முன்னம் வாரிதி ஆர்ப்பு எழுந்தால் என முழங்கி -
(மகிழ்ச்சியால்) முன்னாளில் கடல் ஆரவாரித்துப் பொங்கியதுபோல
முழக்கஞ்செய்துகொண்டு, மன்னர் மன்னன் மாளிகை வாயிலில் வந்தார்
- அரிச்சந்திரப் பேரரசனின் அரண்மனை வாயிலில் வந்தார்கள்.

     புக்கனர் : முற்றெச்சம் : உணவு அருந்தி என்பது அவாய்நிலையான்
வந்தது. வாயில் : இலக்கணப்போலி.
                                                     (4)

 
     மன்னன் முனிவரை வரவேற்றல்
109. வந்த மாதவர் ஓதையம் மன்னவன் கேட்டுச்
சிந்தை யிற்பெரு மகிழ்வரச் சென்றெதிர் கொண்டே
எந்த மாதவம் இன்றுவந் தெய்திய தென்னா
வந்த மாதவர் அடிமலர் முடியுறத் தொழுதான்.