|
பொற்பும்
கற்பும் புகலுதல் |
114. |
மண்ம
டந்தையர் தம்முளும் வாசவன் உறையும்
விண்ம டந்தையர் தம்முளு நிகரிலா விறல்வேற்
கண்ம டந்தைதன் கருங்குழல் அருத்ததிக் கறபிற்
கெண்ம டங்குகற் புடையள்இந் திரையினும் எழிலாள். |
(இ
- ள்.) மண் மடந்தையர் தம் உளும் வாசவன் உறையும் விண்
மடந்தையர் தம் உளும் - பூவுலகப் பெண்களினும் வானுலகப்
பெண்களினும், நிகர் இலா விறல் வேல் கண் மடந்தை - தனக்கு
ஒப்பில்லாத வெற்றிபொருந்திய வேல் போன்ற கண்களையுடைய சந்திர
மதியானவள், தண் கருங் குழல் அருந்ததிக் கற்பிற்கு எண் மடங்கு கற்பு
உடையள் இந்திரையினும் எழிலாள் - குளிர்ந்த கருநிறக் கூந்தலையுடைய
அருந்ததியின் கற்பினைக்காட்டிலும் எட்டுமடங்கு கற்பு உடையவள்
திருமகளினும் அழகு வாய்ந்தவள்.
வசுக்கள்
- தேவர்கள். வசுக்களுக்குத் தலைவன் வாசவன்.
அருந்ததி - வசிட்டன் மனைவி; உளும் : உள்ளும் என்பதன் தொகுத்தல்;
இலா : ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். தண் கருங் குழல் - தண்மை
+ கருமை + குழல் : ஈறுபோதல் இனமிகல் : பண்புத்தொகை, பண்படுக்கு.
கற்பிற்கு : நான்கன் உருபு ஐந்தன் பொருளில் வந்த உருபுமயக்கம்.
எழிலாள் : பண்படியாகப்பிறந்த பெண்பாற்பெயர். எண் மடங்கு-எட்டு +
மடங்கு. இந்திரையின் : ஐந்தனுருபு எல்லைப் பொருளில் வந்தது.
(10)
|
கூந்தற்
சிறப்புக் கூறியது |
115. |
முகிலைவென்
றறலைக் கடிந்துசை வலத்தை
முனிந்துபொற் கடுக்கையை முடுக்கி
அகினறும் புகையும் தகரமும் புழுகும்
அளைஇப்பனி நீரிலே நனைந்து
பகலவற் குடைந்த வசையினால் வெள்கிப்
பலமலர்த் தாரணிந் தவனோ
டிகல்செயக் கருதி இருள்திரண் டாலித்
தெழுந்தன செழுந்தடங் குழலாள். |
(இ - ள்.)
முகிலை வென்று அறலைக் கடிந்து சைவலத்தை
முனிந்து பொன் கடுக்கையை முடுக்கி - நிறத்தால் மேகத்தை வென்று
ஒழுங்கினால் கருமணலையும் பாசியையும் வெறுத்துத் தள்ளி அழகினில்
கொன்றைக்காயையும் துரத்தி, அகில் நறும் பகையும் தகரமும் புழுகும்
அளைஇ - அகிலின் மணம் நிறைந்த புசையினையும் மயிர்ச்சாந்தினையும்
புனுகினையும் கலந்து பூசப்பட்டு மணத்தோடுகூடி, பனி நீரிலே நனைந்து -
பனிநீரில் நனையப்பெற்று, இருள் பகலவற்கு உடைந்து வகையினால்
வெள்கிப் பல மலர்த்தார் அணிந்து அவனோடு இகல் செயக் கருதித்
திரண்டு ஆலித்து எழுந்து அன - இருளானது சூரியனுக்குத் தோற்றோடி
நாணத்தால் வெட்கமடைந்து பற்பல விதமான பூமாலைகளை அணிந்து
அந்தச் சூரியனோடு போர் புரிய எண்ணி ஒன்றுகூடித் திரண்டு
ஆரவாரித்து எழுந்தது போன்ற அடர்ந்த நீண்ட கூந்தலையுடையவள்.
இருள் திரண்டாலன என்று இருளுக்கு ஒப்புமை கூறி இருள்
பகலவற்கு உடையும், கூந்தல் பகலவற்கு உடையாது என்று வேற்றுமை
தோன்றக் கூறினமையின் அன : அன்ன என்ற உவம உருபின் தொகுத்தல்
: தடங்குழல் : உரிச்சொற்றொடர். செழுங்குழல் : பண்புத்தொகை. இது
தற்குறிப்பேற்றவணி.
(11)
|
சொல்லினிமை
யுரைத்தல் |
116. |
பயிர்கடீந்
தனவும் பட்டமா மரமும்
பண்டைநா ளுக்கவெள் ளென்பும்
உயிர்பெறற் பொருட்டுப் பளிதமும் பாலும்
ஒழுகிய தேனும் ஆரமுதும்
குயிலினிற் குரலும் கிளியினின் மொழியும்
குழலும்யா ழும்குழைத் திழைத்து
மயிலியற் சாயல் வாள்நுதல் தனக்கு
மலரயன் வகுத்ததென் மொழியாள். |
(இ
- ள்.) பயிர்கள் தீந்தனவும் பட்ட மா மரமும் பண்டை நாள்
உக்க வெள் என்பும் உயிர் பெறல் பொருட்டு - கருகிய பயிர்களும்
பட்டுப்போன பெரிய மரங்களும் முன்னாளில் உடம்பினின்று கழிந்து
கிடக்கிற வெள்ளெலும்புகளும் உயிர் பெறும்படி, பளிதமும் பாலும்
ஒழுகிய தேனும் ஆர் அமுதும் குயிலினில் குரலும் கிளியின் இன
மொழியும் குழலும் யாழும் குழைத்து இழைத்து - பச்சைக் கர்ப்பூரமும்
பாலும் பொழிந்த தேனும் அருமையான அமுதமும் குயிலின் குரலும்
கிளியின் இனியமொழியும் குழல் ஒலி யாழ் ஒலியும் ஆகிய
எல்லாவற்றையும் சேர்த்துக் குழைத்து அமைத்து மயில் இயல் சாயல்
வாள் நுதல் தனக்கு - மயிலின் சாயல்போன்ற சாயலையுடைய ஒளி
பொருந்திய நெற்றியையுடைய சந்திரமதிக்கு, மலர் அயன் வகுத்தது என்
மொழியாள் - தாமரைப்பூவில் வாழ்கின்ற பிரமன் வகுத்துப் படைத்தான்
என்று சொல்லும்படியான இனிமையான மொழியினை யுடையவள்.
தேமொழியார்
இன்னிசையால் தீந்த பயிரும் பட்ட மரமும் தளிர்க்கும்
வெள்ளென்பு உயிர் பெறும் என்பதனை,
"பட்ட
மரந்தழையப் பண்தேர் அசுணமாக்
கிட்டி யுடன்மறப்பக் கின்னரரும்-முட்டியங்கக்ஹ
கல்லும் உருகக் கனலும் புனலாகப்
பல்லிசைநூ லின் முறையில் பாடுதலும்"
என்ற தமிழ்விடு தூதின்
அடிகளிற் காண்க.
உம்மைகள்
: எண்ணுப்பொருளன. வாள் நுதல் : அன்மொழித்
தொகை : என என்னும் இடைச்சொல் என் என மருவி உவமப்பொருளில்
வந்தது. மலர் அயன : ஏழாம்வேற்றுமைத்தொகை.
(12)
|