வருந்தும்படி, செருப்
பையின்று இறந்த மதனனைச் சூட்டத் திருமுடி
வேண்டும் என்று - சிவபெருமானோடு போர்புரிந்து இறந்த மன்மதனுக்குச்
சூட்டுவதற்குத் திருமுடி வேண்டும் என்று, யானை மருப்பையும் கும்பத்
தலத்தையும் சக்கரவாகத்தையும் வட கனகப் பொருப்பையும் படைத்து -
முதலில் யானைக்கொம்பையும் மத்தகத்தையும் வட்டவடிவாகிய சக்கரவாள
மலையையும் வடக்கேயுள்ள பொன் மலையையும் படைத்து, தெளிந்தபின்
படைத்த புளகித பூரண முலையாள் - கைதேர்ந்தபின் படைத்த புளகம்
முகிழ்த்த வளர்ச்சி நிரம்பிய தனங்களை யுடையவள்.
பையின்று
: பயின்று என்பதன் போலி. "அஐ முதல் இடை ஒக்கும்
சஞயமுன்." இருப்பு : தொழிலாகுபெயர்; மதனனை : நான்காவதன்
பொருளில்வந்த உருபுமயக்கம்; என்றி யானை : குற்றியலிகரம்; மதனுக்கு
முடிசூட்டுவதற்குப் படைத்தது இது. இவள் கொங்கையே மன்மதன் கிரீடம்
ஆம் என்பது கருத்து.
(14)
|
இடையழகு
இயம்புதல் |
119. |
அறம்திகழ்
தவமும் அகிலமும் இதனால்
அழியுமென் றயன்படைத் திலனோ
சிறந்தவேல் விழியை முன்படைத்தயர்ந்து
செங்கரம் சோர்ந்ததோ திகைத்து
மறந்ததோ கரந்து வைத்ததோ களப
வனமுலைப் பொறைசுமந் துருகி
இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல்
எய்துமோ அறியொணா திடையே. |
(இ - ள்.)
அயன் - பிரமன், அறம் திகழ் தவமும் அகிலமும்
இதனால் அழியும் என்று படைத்திலனோ - அறநெறி விளங்கும் வீட்டு
நெறியும் உலகியல் நெறியும் சந்திரமதியின் இடையினால் அழியும் என்று
எண்ணி இடையினைப் படைக்கவில்லையோ, சிறந்த வேல் விழியை முன்
படைத்து அயர்ந்து செங்கரம் சோர்ந்ததோ - சிறந்த வேல் போன்ற
கண்களை முதலில் படைத்து இளைத்துச் சிவந்த கைகள் தளர்ந்தனவோ,
திகைத்து மறந்ததோ - செய்வதறியாது மதிமயங்கி மறந்துபோனினனோ,
கரந்து வைத்ததோ - அல்லது அவள் வடிவில்
மறைத்துவைத்திருக்கிறானோ, களப வன முலைப் பொறை சுமந்து உருகி
இறந்ததோ - சந்தனக்குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச்
சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ, உளதோ இல்லையோ இனி மேல்
எய்துமோ இடையே அறி ஒணாது - இடை இருக்கிறதோ இல்லையோ
அல்லது இனிமேல்தான் உண்டாகுமோ இடை இருப்பதாகவே
தெரியவில்லை. இத்தகையது இவள் இடை என அறிக.
ஓகாரம் : தெரிநிலை. அயன் சோர்ந்தது வைத்தது
: திணைவழு.
அறி ஒணாது : வினையெச்சத்து அகரம் தொக்கது. ஒணாது : எதிர்முறை
வினைமுற்று.
(15)
|