பக்கம் எண் :


8

         கலைமகள் வணக்கம்
10.

மருப்பவள வாக்குவிந்து திரண்டு முத்து
   வடம்அணிந்து குடம்எனவே வயங்கிச் செம்பொற்
பொருப்பவள வாவளர்ந்து ததும்பி விம்மிப்
   புடைபரந்த களபநறும் புளகக் கொங்கைத்
திருப்பவள வாயாளைத் தேனை மானைச்
   செழும்படிக நிறத்தாளைத் திகழ்வெண் கஞ்சத்
திருப்பவளை உலகேழும் ஈன்ற தாயை
   எனதிதயக் கமலத்தே இருத்தி னேனே.

     (இ - ள்.) மருப்பு அவளவாக் குவிந்து திரண்டு, முத்துவடம்
அணிந்து குடம் என வயங்கி, செம்பொன் பொருப்பு அ அளவர வளர்ந்து
ததும்பி விம்மிப் புடைபரந்த களப நறும் புளகக் கொங்கை -
யானைக்கொம்பின் அளவாகக் குவிந்து திரண்டு, முத்துவடம் அணியப்
பெற்றுக் குடம்போல் விளங்கி, மேருமலையளவு வளர்ந்து பொன்னிறம்
ததும்பி விம்மிப் பிளவு காணமுடியாதபடி பரந்த சந்தன நறுமணங் கமழும்
தனங்களையும், திருப்பவள வாயாளை - அழகிய பவளம்போன்ற
வாயையும் உடையவளை, தேனை மானை செழும் படிக நிறத்தாளை -
நினைப்பவர்க்குத் தேன் போன்ற அறிவின்பம் அளிப்பவளை, மான்
போன்ற மருண்ட பார்வையுடையவளை, செழுமையான படிக நிறம்
பொருந்தியவளை, திகழ் வெண் கஞ்சத்து இருப்பவளை - விளங்குகின்ற
வெண்தாமரை மலரில் இருப்பவளை, உலகு ஏழும் ஈன்ற தாயை - ஏழு
உலகத்துயிர்களையும் தோற்றுவித்தளிக்கும் தாய் போன்றவளாகிய
கலைமகளை, என் இதய கமலத்தே இருத்தினேனே - என்னுடைய
உள்ளத்தாமரையில் வைத்தேன்.

     அம்மையின் தனங்கள் பரஞானமும் அபரஞானமுமாகிய அருளறிவும்
கலையறிவும் கொடுப்பன ஆகலின் பெருமையாக உரைக்கப் பெற்றன.
குளத்தாமரை உறைபவளை உளத்தாமரை உறையச்செய்கிறார் கவி.
"வெண்தா மரைக்கன்றி நின்பதந் தாங்கஎன் வெள்ளை உள்ளத் தண்தா
மரைக்குத் தகாதுகொலோ" என்றார் குமரகுருபரர். சத்தி, உலகெலாம் ஈனல்,
"பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவையளித்து"
என்ற சித்தியார் வாக்கிற் காண்க. படைப்புக் கடவுளாகிய நான்முகனது
சத்தி நாமகளாதலின் இவ்வாறு கூறப்பட்டது.
                                                     (10)

              அவை அடக்கம்
11. நீர்கொள்வார் பாலோடு நேர்உற்றால் பதர்கொள்வார்
   நெல்லோ டுற்றால்
நார்கொள்வார் பூவுற்றால் வேர்கொள்வார் அதிற்சிறிது
   நறையுண் டாயின்