பத்தாவது :
நிரையத்துளறவுரைச்சருக்கம்.
930. சக்கரப் பிரபை தன்பா னிற்பதற் கார்வம் வைத்துச்
சக்கரப் பிரபை தன்பா னின்றவன் றன்னைக் காணா
மிக்கவெந் துயர முற்றே னவன்றுயர் நீங்க வெண்ணி
யக்கணத் தவனைக் கூடி யறிதியோ வென்னை யென்றேன்.
(இ-ள்.) (மேற் கூறியபடி தர்மபோதனை செய்ய நாடி), சக்கரப்
பிரபை தன் பால் - சக்கராப் பிரபையென்னும் இரண்டாநரகத்தில்,
நிற்பதற்கு - போய் ஜனித்து நிற்பதற்கேதுவாகிய, ஆர்வம் - பரிக்கிரக
வாஞ்சையை, வைத்து - மனதில் தரித்த பாவகர்மத்தினால்,
சக்கரப்பிரபை தன் பால் - சர்க்கராப்பிரபை யென்னும் அவ்விரண்டா
நரகத்தில், நின்றவன் தன்னை - திரவிய கர்ம பந்தனாகி நின்ற
அந்நாரகனை, காணா - கண்டு, மிக்க - மிகுதியாகிய, வெம் -
கொடுமை பொருந்திய, துயரம் - துக்கத்தை, உற்றேன் -
அடைந்திராநின்றவனாகிய நான், அவன் - அந்நரகனுடைய, துயர் -
துக்கமானது, நீங்க -நீங்கும்படி, எண்ணி - ஆலோசித்து, அக்கணத்து
- அச்சமயத்திலேயே, அவனைக் கூடி - அவனது சமீபஞ் சேர்ந்து,
(அவனை நோக்கி, நாரகனே!). என்னை - என்றனை, அறிதியோ -
தெரிவாயோ!, என்றேன் - என்று பூர்வசம்பந்த விருத்தாந்தங்களைச்
சொல்ல வாரம்பித்தேன், எ-று. (1)
931. மதுரையா னாக வென்பால் வாருணி மகளாய் நீபின்
சதுரமை தத்தை யானேன் மகன்பூர சந்திர னானாய்
விதியினா னோற்றென் னோடு மாசுக்கம் புக்கு விஞ்சைப்
பதியிற்சீ தரையா னேனென் மகளிசோ தரையு மானாய்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்ல ஆரம்பித்து நாரகனே!), யான் -
நான், மதுரையாக - (சில பவங்களுக்கு முன்) மதுரையென்னும்
பெயரையுடைய பிராம்மணஸ்த்ரீயாக, (அப்போது), என்பால் -
என்னிடத்தே, நீ - நீ, வாருணி - வாருணி யென்னும் பெயருடைய,
மகளாய் - புத்திரியாகப் பிறக்க, பின் - மறு சன்மத்தில், (நான்), சதுர்
அமை - அழகமைந்த, தத்தையானேன் - இராமதத்தை யென்னும் ராஜ
ஸ்திரீயாயினேன், (அப்போது நீ), மகன் - எனக்குப் புத்திரனாகி
பூரசந்திரன் ஆனாய் - பூர்ணச்சந்திரனென்னும், பெயருடையவன்
ஆனாய் (அப்போது), என்னோடும் - என்னுடனே, விதியினால் -
கிரமத்தின்படியினால், நோற்று - விர |