பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 667


     அகத்தீசம் வந்த வரலா றிதுவாகும். இங்குப் பணிந்து போற்றி
அன்னத்தை ஒத்தவர் மண்டபம் திருமாளிகை, திருமுற்றம் ஆகிய
இவ்விடங்களில் துதி செய்வோர், கணத்தலைவர், வாயிற் காவலர் முதலோர்
வணங்குமா றெழுந்தருளி நிலைபெறும் மாவடி முதல்வர்க்கு இப்பக்கத்தே
மத்தள மாத வேச்சரத்தைக் கண்ணுற்றனர்.

என்றி யம்பிய சூதனைப் பழிச்சினர் இறும்புசூழ் வடமேருக்
குன்ற வார்சிலை வாங்கிய மதனுடைக் குழகனா ரடிப்போதில்
ஒன்று சிந்தையோய் மத்தள மாதவேச் சரத்தியல் உரையென்ன
வென்ற மாதவர் வினாதலும் ஆங்கவன் மேவர விரிக்கின்றான்.  290

     என் றியம்பிய சூத புராணிகரை முனிவரர் துதி செய்து குறுங்காடு
சூழ்ந்த மேரு மலையை வில்லாக வளைத்த வலியுடைய மூவாதவர்
அடிமலரில் கலந்த சிந்தையீர்! மத்தளமாதவேசர் வரலாற்றை விரிப்பீர்!
என்று ஐம்புலக்குறும்பை வென்ற பெருந்தவர் வேண்டலும் அப்புராணிகர்
பொருந்த விரிக்கின்றனர்.

மத்தள மாநவேச்சர வரலாறு

     விரைப்ப சுந்துழாய் மணிமுடிப் புங்கவன் வீங்குநீர்க் கலிக்கச்சி,
வரைப்பின் விண்டுவீச் சரக்குறி நிறீ இத்தொழும் பேற்றினான்
மறைநான்கும், இரைப்ப வார்பொழிற் புலிநகர்ப் பொதியிலில்
எடுத்ததாண் டவங்காணுஉ, உரைப்ப ரும்பெறற் படகம்அங்
கெழுப்பிடப் பெற்றபின் உவப்பாலே.                       291

     மணம் வீசும் பசிய துளவமாலையை மணிமுடியில் தரித்த திருமால்
பெரு நீரின் ஒலியையுடைய கச்சித் திருவேகம்பத்தில் விண்டு வீச்சரச்
சிவலிங்கம் நிறுவித் தொழும் பாக்கியத்தால் நான்கு மறைகளும் துதிசெய்யப்
புலியூராகிய சிதம்பரத்திற் பொன்னம்பலத்தின்கண்ணே மேற்கொண்ட
திருநடனத்தைக் கண்ட படகம் முழக்கிடப் பெற்ற பின்னர் மகிழ்ச்சியால்,

     அடிய ளந்தவன் கறைமிடற்றடிகளை ஆனந்தக் கூத்தாடல்,
முடிவில் ஏத்தெடுத் தடியனேன் மத்தளம் முழக்கவும் பெறவேண்டும்,
படியி லாப்பெருங் கருணையஞ் சலதியே பணித்தருள் எனப்போற்ற,
வடிநெடும்படைக் கழுக்கடை ஏந்திய வள்ளலார் அருள்செய்வார்.  292

     அடியால் மூவுலகையையும் அளந்தவர் திருநீலகண்டப் பிரானாரைப்
பேரின்பக் கூத்தின் முடிவில் துதி செய்து அடியேன் மத்தளம் முழக்குதலும்
செய்யவேண்டும் ஒப்பில்லாத பெருங்கருணை மாகடலே! அருள்புரிக’ எனத்
துதி செய்யச் சூலபாணி வள்ளலார் அருள்வார்.