5. பயணப்பட வாவன பண்ணுகையில் வயக்குள வாய்தரு வான்புகுத செயன்மிக்குயர் செந்தமி ழொற்றர்களைப் பயனுக்கெதிர் பார்த்திடு பீடணனும். 6. பகையாளர்கை பட்டிட வேசெயலும் வகைபோகிய வன்கொலை யாளர்படர் தகைமேயவர் தம்மைய டித்தடடா உகைவார்சிலை யோனிடம் விட்டனரே. 7. இப்போது விடினிவ ரேகிமறை தப்பாது தடைபுரி வார்செலவே கைப்பாங்கொடு காவலி லேயிவரை வைப்பீரென வோதினன் வன்கொலையான். 8. இறையேனுமொ ரேதில ரொற்றர்களைச் சிறைகோலுதல் திண்ணிய ரோடுதிகழ் அறமேயவர் தஞ்செய லன்றெனுநன் முறையோர்பகல் முன்னு மறிந்திலனே. 9. சுடரோன்வர வேயவர் துண்ணெனவே படராகிய பால மதன்வழியே கடலாய கிடங்கு கடந்திகலார் அடைவாக நடந்தன ரக்கரையே. 10. கன்றித்தடை செய்யிய காவலரைக் கொன்றக்கரை சென்றவர் கூடும்வரை நின்றக்கரை நேர்மையி லாக்கடையோன் பொன்றத்தமர் காவல் புரிந்தனனே. 11. வில்லாளிக ளாகிய மேவலராம் பொல்லாவடி வாரியர் போதரவே நில்லாவுயிர் நீடிய நீலன்முதல் எல்லாரு மெடுத்தன ரக்கறையே. ------------------------------------------------------------------------------------------- 5. வயம் - வலி. புகுத - புகுந்த. 6. படர் - வீரர். உகைத்தல் - செலுத்துதல். வார் - நீண்ட. 7. மறை தப்பாது - இரகசியத்தைச் சொல்லத் தவறார். 8. இறை - நொடி. பகல் முன்னும் - எப்போதும். 10. கன்றி - சினந்து. கடையோன் - பீடணன். 11. நீடிய - நீடியதெனக் கொண்ட அக்கறை - பெருமுயற்சி. | |
|
|