பக்கம் எண் :


522புலவர் குழந்தை

   
         50.  செய்யோன் விளர்ந்து படவே சிவந்து
                  சிறுவா பிறந்த பொழுது
             நெய்யா டவந்து நெடியோ னுவந்து
                  நிலமாள் கவென்று நெடிய
             கையான் முகந்து மலைமார் பணைந்த
                  கனியே யிடும்பர் கணையால்
             ஐயோ வருந்தி யடடா புலம்பி
                  யழவே யிறந்த தழகோ.

         51.  கொலைவா ணர்விட்ட கணைமார் புதொட்ட
                  குறியா லேபட்ட மகனே
             மலைவா ணரிட்ட குலைவா ழைபட்ட
                  வடிதே னைவிட்ட மலர்போல்
             கலைவா ணரட்ட விழிமீ துபட்ட
                  களமீ துசொட்ட கலுழி
             அலைவா ணர்விட்ட குலமீ துபட்ட
                  வலையோய் வுபட்ட தடடா.

         52.  திசையெட் டுமொன்று படவெற் றிகொண்டு
                  திடமுற் றுயர்ந்த திறலோன்
             இசைநட் டெழுந்து துளிர்விட் டுயர்ந்த
                  வெழில்சொட் டநின்ற வெழிலே
             திசைகேட் டுவந்து நகர்முற் றிநின்ற
                  திருவற் றவம்பர் கணையால்
             பசைகெட் டுலர்ந்து பரிவுற் றுநொந்து
                  படவிட் டிறந்த தழகோ.

         53.  ஏடா ளர்கண்ட விசையோ டுவந்த
                  விறையோன் பயந்த விறையே
             நாடா ளநின்ற நினைவே கவின்று
                  நகர்சூ ழவந்து நலியும்
             கேடா ளர்தந்த கணையா லிறந்து
                  கிளைசூ ழநின்று கதறும்
             காடாள வென்று சமைவா கிநின்ற
                  கனியே கனிந்த திதுவோ.
-------------------------------------------------------------------------------------------
         50. செய்யோன் - சூரியன். விளர்த்தல். வெளுத்தல். நெய்யாடல் - ஈன்ற தாய் எண்ணெய் தேய்த்துக் குளித்தல். 51. மலர் போல் விழிமீது சொட்ட கலுழி. கலுழி - கண்ணீர். 53. ஏடாளர் - புலவர். காடு - சுடுகாடு.