மணத்திற்கு முன்னர் நிகழ்ந்த இராமன்-சீதை சந்திப்பை மிக விரிவாகக் கூறுகிறது. இதன்படி, தம் கல்வியை முடித்துவிட்டு இராம லக்குவர்கள் அயோத்தி திரும்பும் வழியில் காசப்ப முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான வீரர்கள் குழுமி இருக்கக் கண்டு, அதற்கான காரணத்தை அறிந்து வருமாறு இராமன் இலக்குவனை அனுப்ப இலக்குவன் முனிவரின் இருப்பிடம் சென்று நிகழ்ச்சிக்குக் காரணமாகிய வில்லைப் பார்த்துவிட்டு வந்து இராமனிடம் கூற, இராமலக்குவர் இருவரும் அம்முனிவரின் ஆசிரமம் நோக்கி நடக்கின்றனர். அப்போது தன் அரண்மனைச் சாளரத்தின் பக்கமாக வரும் இராமனைக் கண்ட சீதை உடனே இராமன் மீது காதலுற்று மயங்கி விழுகிறாள். காதலுணர்வு மீதூரப் பெற்ற சீதை மருள் வந்தவள் போல விதிர்விதிர்த்து நடுங்கிச் சாய்ந்தாள் என்று சீதையின் காதல் நோயைப் பற்றி இந்நூல் விளக்கமாக உரைக்கிறது.45 வீட்டைச் சுத்தம் செய்வதற்காகப் பெருக்கிக் கொண்டே வந்த சீதை அங்கே வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய வில்லைத் தன் இடக்கையால் தூக்கி, அந்த இடத்தைச் சுத்தம் செய்ததும் மீண்டும் அந்த விலை அங்கே வைத்து விடுகிறாள். இதைக் கண்ட ஜனகன் பெரிதும் ஆச்சரியப்பட்டு, ‘இவள் சக்தியின் அவதாரமே ஆவாள். இந்த வில்லைத் தூக்கி வளைப்பவனுக்குத் தான் இவள் மனைவியாவாள்’ என்று முடிவு செய்கிறான் என்று விரஜ மொழி நாட்டுப்பாடல் ஒன்று கூறுகிறது. வில் வளைப்பு விழாவின்போது இராமன் வில்லை நோக்கிவர, சீதை வில்லின் கனத்தைக் குறைக்குமாறு பார்வதியைப் பிரார்த்தித்தாள் என்று புலந்தஷகர் நாட்டுப் பாடல் ஒன்று கூறுகிறது.46 திருமணத்திற்கு முன்னர்ச் சீதை தன் தந்தையின் தோட்டத்திற்குச் செல்கிறாள். அப்போது அங்கே வந்த இராமன் அவளை அள்ளி எடுத்துக் கொள்கிறான். “என் தங்க நிறமான வளையல்கள் நொறுங்கிவிட்டால் தாய்க்கு என்ன சொல்வது? என்னை இவ்வாறு செய்யாதே. என் கையை விட்டுவிடு” என்று கூறி விடுபட்ட சீதை வீடு சென்றதும் அவனை நினைத்து மனக்கலக்கம் அடைகிறாள். கலக்கத்திற்குக் காரணம் கேட்ட தாயை நோக்கி, “அம்மா, நான் சொன்னால் கோபிப்பாய், திட்டுவாய், வீட்டை விட்டே துரத்தி விடுவாய். நம் தோட்டத்தில் நான் இராமனைச்
45. (a) Sachichithanand Sahai, “The khvay Thuaraphi” The Ramayana Tradition in Asia, 285, 286 (b) Kamala Ratnam, 240 46. vksadkj dSy |