108

திருமணத்திற்கு  முன்னர்  ஒரு நாள் இராமன் சீதையைப் பார்த்து
“என்  அருகில்  வந்து  உட்கார்” என்று அடம்பிடிக்கிறான். ஆனால்,
சீதையோ,  “கன்னிப்  பெண்ணாக  இருக்கின்ற  நான்  எப்படி  உன்
பக்கத்தில்   வந்து   உட்கார   முடியும்?   தங்கத்  தாம்பாளாத்தில்
அமுதகலசம்  வைத்து,  பொன்னும், பொருளும் தானமாகக் கொடுத்து
என்   தகப்பனாரின்   அனுமதி  பெற்றால்  நான்  உன்  பக்கத்தில்
உட்காருவேன்”    என்று    பதிலுரைப்பதாக   ஒரு   இந்திமொழி
நாட்டுப்பாடல் கூறுகிறது.49

இராமகாதையை உட்கொண்ட சில நாட்டுப்பாடல்கள் பெண்களைப்
பெற்ற பெற்றோர் படும்பாட்டைக் கூறூவனவாய் அமைந்துள்ளன:

ஒருநாள்  மிதிலைக்கு  வந்த  தசரதன்  ஜனகனைப் பார்த்து நலம்
விசாரிக்கிறான்.   அதற்கு  ஜனகன்,  “நான்கு  பெண்களைப்  பெற்று
வைத்திருக்கிற  நான்  எந்தப் பெண்ணை யார் வீட்டிற்கு  மருமகளாக
அனுப்புவது   என்று   கவலைப்பட்டுக்   கொண்டிருக்கிறேன்.  இந்த
நிலையில் நீ என் ராஜரீக நலன்களைப் பற்றி விசாரிக்கிறாய்” என்றான்
வருத்தத்துடன்.   அப்போது  தசரதன்,  “ஜனகரே,  எனக்கு  நான்கு
குமாரர்கள்  இருக்கிறார்கள்.  அந்த  நால்வருக்கும்  உங்கள்  நான்கு
பெண்களையும்    மகிழ்ச்சியோடு    மணம்    செய்து    கொடுத்து
விடுங்களேன்”    என்றான்.   இதைக்   கேட்ட   ஜனகன்   சிறிதும்
உற்சாகமில்லாமல்,   “வீட்டில்  உப்புமில்லை,  எண்ணெயும்  இல்லை;
தானியக்  கொட்டகையில்  தானியமும்  இல்லை! பாத்திரம் பண்டமும்
இல்லை.  இந்த  நிலையில் கல்யாணத்தைச் சந்தோஷமாய்ச்  செய்வது
எப்படி”   என்றான்.  உடனே  தசரதன்,  “உப்பு  நான்  தருகிறேன்;
எண்ணெயும் நான் தருகிறேன். உங்கள் தானியக் கொட்டகையை நான்
தானியத்தால்   நிரப்பித்   தருகிறேன்.   மகிழ்ச்சியோடு   சீதையைத்
திருமணம்    செய்து    கொடுங்கள்.    நாங்களும்   மகிழ்ச்சியோடு
அயோத்திக்கு அழைத்துப் போகிறோம்”50


49. vksadkj dkSy

50. Rajarani   varma, gekjs   laLdkj  xhr  vksadkj  dkSy  PP.
163-165, quoted in 14