பட்டுள்ள நேரம் போக - எஞ்சிய நேரங்களில் சிறந்த முறையில் பொழுதுபோக்க விளையாட்டரங்கங்கள் முதலியன அமைதல் வேண்டும் என்னும் தற்கால மனவியலார், சமுதாய இயலார் ஆகியோர் கூற்றை மெய்ப்பிப்பதுபோல் அமைந்துள்ள பாடல், ‘பந்தினை இளையவர் பயில் இடம், - மயில்ஊர் கந்தனை அனையவர் கலை தெரி கழகம், சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம் நந்தன வனம் அல, நறை விரி புறவம்’ - (கம்பன் 79) என்பதாம். பொருந்து கல்வியும் செல்வமும் பூத்த பெருந்தடங்கண் பிறை நுதலார், பந்து பயிலிடம், கலை தெரி கழகம் - இவை மக்கள் வளம். கலம் சுரக்கும் நிதியம், நிலம் பெருக்கும் வளம், நன் மணி சுரக்கும் பிலம் - இவை இயற்கை வளம். இத்துணை வளம் இருந்தும் நெறி கடவாதவர்களாய், குறிக்கோள் அழியாதவர்களாய், காதைகள் சொரியும் செவிநுகர் கனிகளை (க. 82) உண்டு தேக்கெறிகின்ற உயர்பண்பு உடையவர்களாக அந்நகர மக்கள் வாழ்ந்த காரணத்தினாலேதான் அங்குக் குற்றம் இல்லை; கூற்றம் இல்லை. சிந்தனை செம்மை உடையவர் ஆகலின் சீற்றம் எழ இடம் இல்லை. பல் கேள்வி மேவலான் அவரிடை வெண்மை இல்லை. கீதை கூறும் சம திருஷ்டி வாழ்க்கையை அனைவரும் மேற்கொண்டார்கள் என்று கூறுவதனால் குறிக்கோள் தன்மை பெற்ற ஒரு நாட்டை, அந்நாட்டில் உள்ள நகரத்தை, நகர மக்களை எப்படிப் படைக்க வேண்டும் என்பதனைக் கம்பன் தனக்கே உரிய முறையில் எடுத்துக் காட்டுகிறான். இத்தகைய குறிக்கோள் தன்மை பெற்ற நாட்டை, மக்களை அவர்கள் வாழும் முறையைப் படைத்துவிட்ட கவிஞன் இவ்வனைத்தையும் ஒன்று சேர்த்து இவற்றின் எப்பகுதியில் எந்த ஒரு சிறு குறைகூட இல்லை என்று நிலை நாட்ட விரும்புகிறான். இதுவரை சொல்லிய பகுதிகளில் மக்கள் மனவளம் கூறியிருப்பினும் கோசலம், அயோத்தி மக்களுடைய ஆன்மிக வளம் தனிப்படப் பேசப்பெறவில்லை. எனவே, அதனையும் சேர்த்துச் சொல்ல விரும்பிய கவிஞன் நகரப் படலத்தின் ஆறாம் பாடலில் ஈடு இணையற்ற முறையில் இதனைச் சொல்லுகிறான். அருள், அறம் என்பவற்றைத் துணைக்கொண்டு, ஐந்தும் அவித்து, பொங்கு மாதவமும் ஞானமும் பெற்றவர்கள் அனை |