49

நடையில் இந்த இராமாயணத்தைச் செய்துள்ளேன்.
                               (பீடிகா, பாடல்கள் 15, 16, 17, 18)

மூல   நூலாகிய   வான்மீகத்தைப்   படித்துணரும்   அளவுக்குப்
புலமையற்ற  பாமர   மக்களுக்காக,   அதாவது   மலையாள  மொழி
மட்டும்   அறிந்தோர்    படித்துப்     பயனடைவதற்காகத்   தத்தம்
இராமாயணங்களைப்  படைப்பதாகக்  கன்னச ராமாயண ஆசிரியரும்,
மலையாள அத்யாத்ம ராமாயண ஆசிரியரும் கூறுகின்றனனர்.

வேத, புராண ஆகமங்களின்  வழிநின்று  ஆதி  கவி வான்மீகி
மற்றும் முந்தைய   கவிஞர்களின்   மொழிப்படியே  நான்  இந்தச்
சரிதையை என் ஆத்ம திருப்திக்காகப்பாடுகிறேன்.

                                                (1 :7)

எனத் தம் நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறார் துளசதசர்.

முனிவர்களிலே  சிறந்த   வான்மீகியின்   தெய்வப்  படைப்பைச்,
சாதாரண  மகக்ளும் படித்து இன்புற வேண்டும்  என்பதே தம்முடைய
காப்பிய நோக்கம் என்று  வங்காள இராமாயணத்தின் ஆசிரியராகிய
கிருத்திவாசர் கூறுகிறார்.+ 

வராகி    வம்ச   அரசராகிய    மகாமாணிக்கியா   என்பவரின்
வேண்டுகோளுக்கிணங்கவும்,   பொதுமக்களின்  பயன்பாட்டுக்காகவும்,
வான்மீகி   ராமாயணத்தின்   சிறந்த   சுலோகங்களை   அஸ்ஸாமிய
மொழியில்  தருகிறேன். பாலைக் கடைந்து நெய்யை மட்டும் எடுப்பது
போல,    வான்மீகியின்   காவியத்திலிருந்து   சிறந்த   பகுதிகளைத்
தேர்ந்தெடுத்துக்   கொண்டு   சிறப்பில்லாதவற்றை   விட்டுவிட்டேன்.
மகாமாணிக்கரின்  விழைவிற்கு  ஏற்பக்  காவியச்  சுவைக்காகச்  சில
பகுதிகளைப்  புதிதாகவும் சேர்த்துக் கொண்டேன் என்று அஸ்ஸாமிய
கவிச்சக்ரவர்த்தி
மாதவகந்தலி கூறுகிறார்.*


+  Bhabatosh Datta ‘The Ramayana in Bengali’,
  Ramayana Tradition in Asia, New Delhi; Sahitya Akademi
  1989, P.548

* Biswanarayan Shastri, “Ramayana in Assamese Literature.”
  Ramayana Tradition in Asia P. 584.