50

காப்பியத் தொடக்கம்

வாழ்த்து

ஆதி  காவியமாகிய வான்மீகி ராமாயணத்தில்  வாழ்த்துப் பகுதி
அமையவில்லை.  வான்மீகியால்  தொடக்கம்  பெற்ற  இராம  காதை
வடமொழி  சாராத  மொழிகளுள்  முதலில்  தமிழில்தான்  காப்பியப்
படைப்பாக   வெளிப்படுகிறது.   ஆசிரியர்   பெயர்   அறியப்படாத
இராமசரிதை   என்னும்   நூலொன்று   தமிழில்  இயற்றப்பெற்றதாக
அறியப்படினும் இன்று அது வழக்கிலின்மையின் கம்பனது காப்பியமே
தமிழில்  முதற்காப்பியமாகத்  திகழ்கிறது.  இதன்  பாயிரம்  வாழ்த்து,
வருபொருள்    உரைத்தல்,    அவையடக்கம்    என்னும்   மூன்று
கூறுகளையும்    கொண்டுள்ளது.   இதில்   முத்தொழில்   இயற்றும்
மூலத்தைப்   பரம்பொருளாகக்   கருதி   வணங்குகிறார்.   பின்னர்ச்
சத்துவகுணச்     சான்றோரையும்    இறைவன்    அடியார்களையும்
வணங்குகிறார்.     வேறு    கடவுளரை    வணங்கும்    பாடல்கள்
அமையவில்லை.  சென்னை,  கம்பன் கழகப் பதிப்பின்படி இக் கூற்று
இடம்  பெறுகிறது.  இப்பத்திப்பின்  மிகைப்பாடல்களில் அயன், அரி,
அரன்,  விநாயகர்,  சரஸ்வதி,  இராமன், அனுமன் ஆகியோர் மீதான
வாழ்த்துப் பாடல்கள் காணப்பெறுகின்றன.

தெலுகு மொழியின் முதல் இராமாயணக்  காப்பியமாகிய ரங்கநாத
இராமாயணம் நீண்ட வாழ்த்துப் பகுதியைக் கொண்டுள்ளது.  சரஸ்வதி,
கணபதி  முதலான பல கடவுளர்களையும்  வான்மீகி முனிவரையும் தம்
காப்பிய    வெற்றிக்காக    வணங்கும்   பாங்கு   காணப்பெறுகிறது.
இதனையடுத்துத்   தோன்றிய   பாஸ்கர    இராமாயணமும்  மொல்ல
இராமாயணமும் இவ்வாறே பன்முக வாழ்த்தை  உடையனவாக இயற்றப்
பெற்றுள்ளன.    கன்னட    முதல்   இராமாயணக்    காப்பியமாகிய
பம்பராமயணததில்  அருகக்  கடவுள்  வணக்கம்  காப்பிய நிறைவுக்கு
ஆசிவேண்டும்   பான்மையில்    அமைந்துள்ளது.   இதனையடுத்துத்
தோன்றிய  குமாரவான்மீகியின் தொரவெ  இராமாயணத்தின்  முதற்
சந்தி (படலம்) முழுவதும் பன்முகக் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது.
பெருவழக்காக  வழங்கும்  மலையாள   இராமாயனங்களில்  இராம
பணிக்கரின் கன்னச இராமாயனமும், எழுத்தச்சனின்  அத்யாத்ம ராமா