51

யணமும்   குறிப்பிடத்தக்கவை.  இவை  இரண்டுமே பிரம்மா, கணபதி,
சரஸ்வதி,  சிவன்  முதலான  கடவுளர்களையும்,  வான்மீகி  முதலான
முனிவர்களையும்,    பிராமணர்,    குருமார்,   ஆசிரியர்   போன்ற
சான்றோர்களையும்    வணங்கித்    துதிக்கும்   நீண்ட   வாழ்த்துப்
பகுதிகளைக்  கொண்டுள்ளன.  துளசிதாசர்  தம் வாழ்த்துப் பகுதியில்
வாணி,   விநாயகர்,  பவானி,  சங்கரன்,  தம்  ஆசிரியர்,  வான்மீகி,
அனுமன்,  சீதை,  இராமன்  ஆகியோர்க்கு வணக்கம்  செலுத்துகிறார்.
தாம்  இராமாயணத்தை இயற்றிய காரணத்தைக் கூறிய பிறகு  மீண்டும்
கணேசர்,  விஷ்ணு,  சிவன்,  தம்   ஆசிரியர்,  அந்தணர்,  துறவியர்,
சான்றோர்  ஆகியோரை  வணங்குகிறார். சான்றோர்க்கு  மட்டுமன்றித்
தீயோர்க்கும் வாழ்த்தில் இடம் தந்தவர் காப்பிய  உலகில்  துளசிதாசர்
ஒருவர்தான்   போலும்.  பிறர்   துன்பம்  கண்டு  மகிழ்ந்தும்,  பிறர்
ஆக்கம்   கண்டு  பொறாது  பொருமி  வருந்தியும்  பிறர்க்கு   கேடு
சூழ்வதில்   இன்பம்  காணும்  தீயோரைத்   தம்  இரு  கையெடுத்து
வணங்குவதாகக்   கூறுகிறார்.   எனவேதான்,   கடவுளர்,   அரக்கர்,
பாம்புகள்,    பறவைகள்,   கந்தர்வர்,  கின்னரர், பேய்க்கணம் எனப்
பல்வேறுபட்டவர்களையும் துளசிதாசர் வாழ்த்துகிறார்.

மேற்கண்ட காப்பியங்களின்   வாழ்த்துப்  பகுதிகளைத்  தொகுத்து
நோக்குமிடத்துக் கீழ்க்காணும் செய்திகள் புலனாகின்றன.

ஆதிகாவிய  கவிஞராகிய   வான்மீகி   இராமனின்   சரிதத்தைக்
கூறப்புகுந்தாரே  தவிர,  கடவுள்  வாழ்த்தாக  எந்தக் இறைவனையும்
வணங்கவில்லை.  தலைமுறைகள்  பலவாக மாறி வந்தபோது வான்மீகி
இராமாயணத்தை    ஓதியவர்கள்    தத்தம்    மரபுக்கேற்பப்   பல
தெய்வங்களை    வணங்கும்   வாழ்த்துச்   சுலோகங்களை   எழுதி
வைத்துள்ளமையைப் பிற்கால ஏடுகள் காட்டுகின்றன. எனினும், அவை
நூலுள்   இடம்   பெறாமல்   முற்சேர்க்கையாகக்  காணப்படுகின்றன.
வடபுல,   தென்புலமாகிய  இருவழக்கு (Northern  Recension  and
Southern Recensuion) ஏடுகளிலும் இத்தன்மை கணப்படுகிறது.

கம்பன்   காப்பியத்தில்  முதற்  பாடலில்  பரம்பொருள் வணக்கம்
சொல்லப்படுகிறது.    பிற    காண்ட   முகப்புகளில்   காணப்பெறும்
பாடல்களுள்   மூன்று   பரம்பொருளையும்,   இரண்டு  இராமனையும்
வாழ்த்துவனவாக  உள்ளன.  அதனாலும், ஏற்புடைக்  கடவுளாதலாலும்
கம்பனின்  கடவுள் வாழ்த்தைத் திருமால் வாழ்த்தாகக்  கொள்வோரும்
உளர்.    பாடலைப்   பொறுத்தவரை   பொதுவில்   பரம்பொருளின்
தன்மையைப்   பகர்வதாக   மட்டுமே  தோன்றுகிறது.   சேக்கிழாரின்
பாயிரத்தில் வரும் வாழ்த்தை நோக்கினால்