சான்றோர்களால் நிறைந்து வாழத்தக்கதாய் அமைந்த நகரம். ( 5: 17-20) துணைவலியற்றவனையும், மகப்பேறு அடையாதவனையும் சப்தத்தால் அறியத்தக்கவனையும் அதாவ்ணெதிரில் நில்லாதவனையும், புறங்காட்டிப் பயந்தோடுகின்றவனையும் அம்பெய்து கொல்லும் வீரர்கள் அந்நகரத்தில் இல்லை. காடுகளில் உள்ள தீங்கிழைக்கின்ற சிங்கம், புலி, பன்றி முதலானவற்றை உடல்பலத்தாலும், ஆயுதங்களாலும் கொன்று அழிக்கின்ற பெரு வீரர்களை ஆயிரக்கணக்காக உடையது. வேதங்களையும், ஆறு வேதாங்கங்களையும் கற்றுத் துறை போய, சான்றாண்மை மிக்க, வாய்மை தவறாத முனிவர்களாலும் அவர்களுக்கு ஒப்பான உத்தம பிராமணர்களாலும், நிறைந்த அந்த நகரத்தை அப்போது தசரத மன்னன் ஆண்டு வந்தான். ( 5: 21-24) சருக்கம் ஆறு அப்படிப்பட்ட சிறந்த நகரத்தில் மக்கள் எல்லோரும் அற நெஞ்சினர்; மகிழ்ச்சியோடு வாழ்பவர்கள்; பற்பல கலைகளை அறிந்தவர்கள்; தத்தம் பொருள்களைக் கொண்டு மனநிறைவு அடைபவர்கள்; உலோபமற்றவர்கள்; உண்மையே பேசுபவர்கள். (1. 6:6) அந்த நகரத்தில் குறைவுபட்ட செல்வர்கள் இல்லை; பசு, குதிரை, தன, தான்யம் இல்லாதவன் இல்லை; பெறவியலாத பேறுகள் உடைய இல்லறத்தான் ஒருவனும் இல்லை, (எல்லாப் பேறுகளும் பெற்ற இல்லறத்தார் வாழும் நகரம் என்பது கருத்து) - (6 : 7) பிறர்பொருளை வெஃகுபவனையோ, அற்ப குணமுள்ளவனையோ, அருவருப்பான தோற்றமுள்ள ஆணையோ அயோத்தியில் ஓரிடத்தும் பார்க்க இயலாது. கற்றுப் புலமையடையாதவனில்லை; நாத்திகனும் இல்லை. ( 6 : 8 ) குண்டலமில்லாதவன் இல்லை; மகுடமில்லாதவன் இல்லை; மழலை இல்லாதவன் இல்லை; போகமில்லாதவன் இல்லை; பரி
இவையும், இனிவரும் வான்மீகப் பகுதிகளும் தர்மாலயா பதிப்பைப் பின்பற்றித் தரப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவும், ஏனைய மொழி இராமாயணங்களின் பகுதிகளும் இக் கட்டுரையாசிரியரால் மொழிபெயர்த்துத் தரப்படுகின்றன. |