64

தொகுப்புரை

வான்மீகி  அயோத்தி நகரத்தை 47 சுலோகங்களில் வருணிக்கிறார்.
ஐந்தாம்  சருக்கத்தில்  நகரத்தின்  இயற்கை  அமைப்பு,  பாதுகாப்புக்
கருவிகள், தெருக்கள், மாட மாளிகைகள், மக்களின் பொது  இயல்புகள்
ஆகியவற்றை    விளக்குகிறார்.   ஆறாம்   சருக்கத்தில்   மக்களின்
சிறப்பியல்புகளைப்   பலபட   விரித்துரைக்கிறார்;   செல்வ   வளம்,
சிந்தையின்  நிறைவு,  கல்வி,  ஒழுக்கம்,  கருணை  போன்ற  பண்பு
நலன்களை  வருணிக்கிறார்.  அயோத்தி நகரம் ஒரு மகோன்னதமான
வாழ்விடம்; அங்குள்ள மக்கள் பொருட் செல்வம், உடல்வளம்,  உள்ள
வளம், ஒழுக்க வளம் போன்ற பன்முகச் சிறப்பினை  உடையவர்களாக
இருந்தனர் என்ற கருத்து வான்மீகத்தில் பெறப்படுகிறது.

கம்பன்     ஆற்றுப்  படலம்   என்ற   ஒரு  புதுப்  பிரிவைத்
தோற்றுவித்துத்   தமிழ்   மரபிற்கேற்ப   நானில  வருணனைகளைத்
தருகிறான்.     காப்பிய     மரபில்      இப்புதுமை     கம்பனால்
செய்யப்பட்டுள்ளது.  நாட்டுப்  படலம், நகரப்  படலம் என்ற இரண்டு
படலங்களும்   அயோத்தி   நகரின்  செல்வ  வளம்,  படை  வளம்,
மக்களின்   செம்மைசால்  மன  வளம்,  ஒழுக்கம்   போன்றவற்றைப்
பலபடக்   கவிதை   நயம்   பொதுளக்  கூறுகின்றன.  வான்மீகியின்
வருணனை  ஓரளவு  கற்பனையுடன்  இயல்பு   நவிற்சியாக அமையக்
கம்பனின் வருணனை கருத்துக் கற்பனை மிகுந்து உயர்வு  நவிற்சியாக
அமைந்திருக்கக்   காண்கிறோம்.  இரு  காப்பியங்களும்  குறிக்கோள்
உலகப்  பார்வையினை  உடையன.  எனினும்,  கம்பனின் குறிக்கோள்
உலக  நாகரிக  முதிர்ச்சியையும்  கவிதைச்  சுவையின்  சிகரத்தையும்
எட்டி நிற்பதைக் காண்கிறோம்.

கம்பனின்     நகர   வருணனை   மற்றொரு   புதுமையினையும்
கொண்டுள்ளது.   வான்மீகியின்   நகர  வருணனையில்  இராமனைப்
பற்றிய  குறிப்பெதுவும்  இல்லை.  தசரதன்  உலகப்  பெரும்புகழுடன்
அயோத்தியை ஆண்டதாகக் கூறுகிறான். ஆனால் கம்பனோ,

‘மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
     மாதவம் அறத்தொடும் வளர்த்தார்?
எண்ணருங் குணத்தின் அவன் இனிதிருந்து இவ்
     ஏழ் உலகு ஆள்இடம்......’ (5)

‘செங்கண்மால் பிறந்து ஆண்டு அளப்பருங் காலம்
     திருவின் வீற்றிருந்தனன் என்றால்
அங்கண்மா ஞாலத்து இந்நகர் ஒக்கும் பொன்நகர்
     அமரர் நாட்டு யாதோ?’ (6)