66

இந்த  வில்லை நாணேற்றியதால் தேவரீரைத் தேவோத்தமராகிய,
பரமாத்மாவான, மது என்ற அசுரனைக் கொன்றவரான திருமால் என
நான் கண்டுகொண்டேன். (1:76:18,19)

                                           பரசுராமன் கூற்று.

தாயர் முறை

தசரதன் தன் மனைவியர்க்குப்  பாயசம்  அளிக்கையில்  கோசலை,
சுமித்திரை, கைகேயி என்ற முறையில் தருகிறார். (1:18:29,30)

அயோத்தி   மீண்டதும் அரண்மனையின் அந்தப்புரத்துள் அரசியர்
மூவரும்   தம்   மருமக்கள்மாரை   வரவேற்றதாகக்    கூறுமிடத்துக்
கோசலையும்,  சுமித்திரையும்,  நுண்ணிடையாளான கைகேயியும் என்று
அதே முறையில் கூறுகிறார் வான்மீகி. (1, 77:13)

தசரதனின்     மக்களைப்பற்றிக்   கூறுமிடத்து   இராமர்,  பரதர்,
லட்சுமணர், சத்ருக்கனர் என்ற முறைமையை  வான்மீகி கையாள்கிறார்.
(1, 18:21)

தசரத  ஜாதகத்தின்படி வாரணசியை ஆண்டு வந்த தசரதனுக்குப்
பதினாறாயிரம்  மனைவியர்  இருந்தனர்.  அவர்களுள்  மூத்தவளாகிய
பட்டத்தரசிக்கு   இராமன்,    இலக்குவன்,   சீதை   என்னும்  மூவர்
மக்களாகப்   பிறந்தனர்.   மூத்தவள்   இறந்ததும்  அவள்  இடத்தில்
வேறொருத்தியைப் பட்டத்தரசியாக  மணந்து கொண்டான். அவளுக்குப்
பரதன்    பிறந்தான்.     இந்த    அரசியிடம்    அரசன்   மிகவும்
பேரன்புடையவனாய் இருந்தான்.1

முதல் ஜைன ராமாயணமாகிய விமலசூரியின் பௌம சரிதத்தின்படி
தசரதனுக்கு    நால்வர்    மனைவியர்,   கோசலைக்கு    இராமனும்,
கைகேயிக்குப்   பரதனும்,   சுமித்திரைக்கு   இலக்குவனும்,  நான்காம்
மனைவியாகிய சுபிரபைக்குச் சத்துருக்கனனும் பிறக்கின்றனர்.

இராம   சர்மாவின்   அத்யாத்ம  ராமாயணத்தின்படி   தசரதன்
பாயசத்தில் காற்பங்கைக் கோசலைக்கும், அதே அளவு கைகே


1. The Jakata ed. E.B. Cowell and translated from Pali by
W.H.D.  Rouse  London.  Cup.  1901, Quoted by Shankar Raju
Naidu, Kambaramayanam Madras University 1971, pp 21-22