யிக்கும், அதைப்போல் இருமடங்கைச் சுமித்திரைக்கும் கொடுத்தான். (1,3:10-12) பரம்பொருள் இராமனாகவும், அருளாகிய பேரிறை சீதையாகவும், சேஷநாகன் இலக்குவனாகவும் அவதரித்தனர். (1,2:27) கம்பராமாயணத்தில் வேள்வி முடிவில் பூதம் வைத்துச் சென்ற அமுதமொத்த பிண்டத்தினைக் காட்டி, “இதனை உரிய மாதர்கட்குத் தக்க மரபினால் அளித்திடுக” என்று கலைக்கோட்டு முனிவன் கூறுகிறான். தயரதன் அவ்வாறே கோசலைக்கு ஒரு பங்கினையும், கைகேயிக்கு ஒரு பங்கினையும் சுமித்திரைக்கு ஒரு பங்கினையும் அளித்தான்; பின்னர்ப் பிதிர்ந்து வீழ்ந்த பிண்டப் பகுதியையும் சுமித்திரைக்கு அளித்தான். சிலநாள் சென்ற பின் அரசியர் மூவரும் கருவுற்றனர். (1,5:87-91,100) மகப்பேற்றுக்குரிய பருவம் வந்ததும் திருமாலை மகனாகப் பெற்றனள் கோசலை; கேகய மாது மைந்தனை நல்கினாள்; இளையவளாகிய சுமித்திரை இளையவனைப் பயந்தினள்; சுமித்திரை மீண்டும் ஒரு மகவை ஈன்றனள். யாம் தசரதன் மதலையாய்ப் பூமியில் அவதரிப்போம்; சங்கும், சக்கரமும், ஆதிசேடனும் இளையவர்களாகப் பின்தொடர நாம் அயோத்தியில் பிறப்போம் என்று திருமால் அருளினன். (1,5:21-22) தெலுகு ரங்கநாத ராமாயணம் பாயசப் பாகுபாட்டை வான்மீகி ராமாயணம் போன்றே கூறுகிறது. கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற முறையில் பாயசம் தரப்படுகிறது. மக்களின் பிறப்புப் பற்றிக் கூறுமிடத்தும் இராமன், பரதன், இலட்சுமணன், சத்ருக்கனன் என்ற முறையையே பின்பற்றுகிறது. இராமன் முதலானோர் பிறந்த போதிருந்த கிரக நிலையைச் சுட்டுமிடத்தும் ரங்கநாத ராமாயணம் வான்மீகத்தைப் பின்பற்றுகிறது. பாஸ்கர ராமாயணமும் வான்மீகத்தை ஒட்டியே பாயசப் பகுப்பையும், தாயர் முறையையும், மக்கள் பிறப்பு முறையையும் கூறுகிறது. திருமால் இராமனாகவும், திருமாலின் அம்சங்கள் பரதன் முதலானோராகவும் அவதரிப்பதாக இந்த ராமாயணம் கூறுகிறது. சித்திரை வளர்பிறை நவமியில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருக்கக் கர்க்கடக லக்னத்தில் புதன் கிழமையன்று |