69

துளசி  ராமாயணத்தின்படி, அங்கியங் கடவுள் தந்த பாயசத்தைத்
தசரதன்  இரு  பாதியாக்கி ஒன்றைக் கோசலைக்கும்,  எஞ்சியதில் ஒரு
பாதியைக்  கைகேயிக்கும் கொடுத்தான். மேலும் எஞ்சி  நின்றதை இரு
பாகமாக்கிக் கோசலை, கைகேயி இருவர் கைகளிலும் தந்து அவர்களது
ஒப்புதலின்   பேரில்   அந்த   இரு  பாகத்தையும்  சுமித்திரைக்குக்
கொடுத்தான். இம்முறையில் மூவரும் கர்ப்பம் தரித்தனர். (1:189-2)

தசரதன் வீட்டில் நானே நால்வராக  வந்து  அவதரிப்பேன் என்று
திருமால் கூறுகிறார். (1:186-2)

நாட்டுப்புற இலக்கியம்:

மொழியறியப்படாத   இந்திய   நாட்டுப்பாடல்   ஒன்றின்படி,
இராமனின்     பிறந்த  விழா   விருந்திற்காக   ஆண்மான்  ஒன்று
கொல்லப்படுகிறது. அதனுடைய  பிணை,   தன்  துணையை  இழந்து
மிகவும்   வருந்திக்   கோசலையைப்   பார்த்து   என்   துணையின்
தோலையாவது எனக்குக் கொடுத்துவிடு; அதனை  என்மீது போர்த்துக்
கொண்டாவது துணையை இழந்த  வருத்தத்தை ஆற்றிக்  கொள்வேன்
என  மன்றாடியது.   தன்  மகன்    இராமன்   விளையாடுவதற்குரிய
தோற்கருவி    (கஞ்சிரா)  செய்வதற்குத்    தோல்  தேவைப்படுகிறது
என்று கூறிப் பிணையின் வேண்டுகோளைக் கோசலை மறுத்துவிட்டாள்.
பின்னர்  அந்தப் பறை  முழங்கும் பொழுதெல்லாம்  பெண்மான் தன்
செவிகளைச்  சிலிர்த்துக் கொண்டு   அவ்வொலியைக் கேட்டுத்  தன்
துணையை நினைந்து வருந்தா நின்றது.

ஒரு  மானைப்  பலி  கொண்ட  காரணத்தால், ஒரு  மானால் தன்
மனைவியை இழக்கும் சாபத்தை இராமனும், தன்  கணவனை  இழக்கும்
சாபத்தை கோசலையும் அடைகிறார்கள்.5

சீதா  கலியாணம்  என்னும் தமிழ் வில்லுப்பாட்டின்படி,  பாயசம்
நிரம்பிய  கிண்ணத்தைக்  கலைக்கோட்டு  முனிவர் வசிஷ்டரிடம்  தர
வசிஷ்டர்  அதைத்  தசரதனுக்குக்  கொடுத்தார்.  தசரதன்  கோசலை,
கைகேயி,  சுமித்திரை  என்னும் முறையில் பாயசத்தைக்  கொடுத்தான்.
பங்கு  விகிதம்  இதில்  குறிப்பிடவில்லை.6 மக்கட்குப் பெயரிடுங்கால்,
இராமன்,   பரதன்,   இலட்சுமணன்,   சத்துருக்கன்  என்னும்  முறை
குறிக்கப்படுகிறது.  இராமனுக்குப்  பெயர்  வைத்ததைக்   கீழ்வருமாறு
இந்த வில்லுப்பாட்டு:


5. Vidhya Nivas Misra, ‘The Rama Story in India Folk Lore:
Some Significant innovations,’ Asian Variations in Ramayana
PP.102-103

6. தி.சி. கோமதி நாயகம்,  தமிழ்  வில்லுப்பாட்டுகள்  (சென்னை:
தமிழ்ப் பதிப்பகம், 1979) ப.206