‘காரமலைக் கைக்கருவி எய்த்தே அராவணையில் துயில்வோம் என அன்னாள் விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக் கன்றே இராமா எனப்பெயர் ஈந்தனரே’ இதில் இராமன் திருமாலின் அவதாரம் எனக் குறிப்பிடக் காண்கிறோம். இராமன் முதலானோர் கல்வி பயின்றதைக் கூறுமிடத்து. ‘ஆதி நூல் அரிச்சுவடி ஆன நன்னூல் இலக்கணங்கள் நாலடியார் திருக்குறளும் நலமுடனே தான்படித்தார்’ என்று கூறுகிறது.7 போஜ்புரி நாட்டுப்பாடல் காலையில் தசரதனை எழுப்பச் சென்ற அரண்மனைத் தாதி ஒருத்தி, “இன்று காலையில் ஒரு மலடனின் முகத்தில் விழிக்கிறேன். இன்றைக்குப் பொழுது எப்படிப் போகுமோ” என்று சற்று உரக்கக் கூறியவாறே கவலைப்பட்டாள். விழித்தெழுகையில் அதைக் கேள்வியுற்ற தசரதன் மிகவும் நொந்து போனான்.8 பிள்ளைப்பேற்று மருந்து ஒன்றைத் தசரதன் கொண்டு வந்து தருகிறான். அதை அரைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கோசலையும் சுமித்திரையும் குடித்துக் கொள்கிறார்கள். அந்தக் கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அலசி மீதி இருந்ததைக் கைகேயி குடிக்கிறாள். அரசியர் மூவரும் கருவுற்று மக்களைப் பெற்றனர். மக்கள் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடத் தசரதன் பொன்னும், பொருளும் தானமாகக் கொடுக்கிறான். அதைக் கண்ட கைகேயி, “கொஞ்சம் முன்பின் யோசித்து வாரியிறைங்க. ஏனென்றால், கொஞ்சம் பரதனுக்கும் மீதி இருக்கட்டும். இராமனோ பன்னிரண்டு வயதிலே காட்டுக்குப் போக வேண்டி வரும்”9 என்று எச்சரிக்கிறாள்.
7. மேற்படி, 208-209. பெயர் வைப்பது பற்றிக் கூறும் இப்பாடல் கம்பனின் பாடலை ஒட்டி எழுதப்பட்டுள்ளது காண்க. 8. $”.knso mik?;k; Hkstiqjh Xze xhr] I`k- 10-11, quoted vksadkj dkSy] 12 9. மேற்படி ப. 12 |