71

விரஜ மொழி நாட்டுப்பாடல்

அயோத்தி     நகரத்   தோட்டக்காரன்   ஒருவன்    மகப்பேறு
மருந்தொன்றைத் தசரதனுக்குக்  கொடுத்தான். தசரதன் மூலமாக அதை
அருந்திய அரசியர் மூவரும் மக்கட்பேறு அடைந்தனர்.

ஒருநாள்,  தசரதன்  கட்டில்மீது  அமர்ந்திருக்க, அதன் அருகே
கீழே உட்கார்ந்திருந்த  கோசலை,  “அரசே,  தங்களுக்கு  அழகான
குழந்தைகள்  பிறந்திருக்கிறார்கள்.  தாராளமாகத்  தான  தர்மங்கள்
செய்யுங்கள்” என்றாள்.  அரசனும்  பெரிதும்  மகிழ்ந்து  அவ்வாறே
செய்து  கொண்டிருந்தான்.  அப்போது  அறையின்  உள்ளேயிருந்த
கைகேயி,  “ஏ!  ராஜாவே,   எந்தப்   பிள்ளைக்காகச்  செல்வத்தை
யெல்லாம்  வாரி வாரி  இறைக்கிறாயோ  அவன்  கொஞ்ச  நாளில்
காட்டுக்குப் போகப் போகிறான்” என்று எச்சரிக்கிறாள்.10

தொகுப்புரை

மக்கள் பிறந்த வரலாறாகப் பல்வேறு இராமாயணங்கள் கூறுவதைத்
தொகுத்துப்   பிறப்பும்   அவதாரமும்,   பாயசப்  பங்கீடு,  அரசியர்
முறைமை,   மக்கள்   பிறப்பின்   போதிருந்த  கிரகநிலை  என்னும்
கூறுகளாக வகுத்துக் கொண்டு ஆராயலாம்.

பிறப்பும் அவதாரமும்

தசரத     ஜாதகம்   முதலான   பௌத்த    இரானாயணங்களும்
விமலசூரியின்  பௌம  சரிதம்,  குணபத்ரரின் உத்தர  புராணம், பம்ப
ராமாயணம்,  போன்ற  ஜைன  ராமாயணங்களும்  தசரதனின்  மக்கள்
உலக   இயற்கையோடு   ஒட்டிய   முறையில்   பிறந்தார்கள்  எனக்
காட்டுகின்றன.   இவை  இராமன்  முதலானோரை  அவதாரங்களாகக்
கருதவில்லை.

வான்மீகியின்   காப்பியம்,  வியாச  பாரதம்,   இராம  சர்மாவின்
அத்யாத்ம  ராமாயணம்,  கம்ப  ராமாயணம், தெலுகு  ராமாயணங்கள்,
சுயம்புதேவரின்      பத்மபுராணம்,    மலையாள    ராமாயணங்கள்,
பலராமதாசரின்  ஒரிய  ராமாயணம்,  துளசி  ராமாயணம், ஏகநாதரின்
பாவார்த்த  ராமாயணம்  ஆகியனவெல்லாம்  இராமன் முதலானோரை
அவதாரங்களாகப் படைத்துக் காட்டுகின்றன.


10. vksadkj dSy] d‘ehjh vkSj fgUnh jkedFkk dkO; dk 

rqYukRed v?;;u (paMhxM+ % cgjh ifCy’‘ku] 1974)