உரைக்கின்றன. மொல்ல ராமாயணம் மட்டும் கோசலைக்கு 1/4 கைகேயிக்கு 1/4 சுமித்திரைக்கு 1/2 என்ற விகிதத்தில் தரப்பட்டதாகக் கூறுகிறது. கன்னட தொரவெ ராமாயணம்பாயசத்தை நான்கு கூறாக்கிச் சுமித்திரைக்கு இரண்டு பாகத்தையும் மற்றைய இருவர்க்கும் ஒவ்வொரு பாகத்தையும் தசரதன் கொடுத்ததாகக் கூறி வான்மீகத்தினின்று வேறுபடுகிறது. இந்த இரு ராமாயணங்களும், காளிதாசரின் இரகுவம்சம், ராமசர்மாவின் அத்யாத்ம ராமாயணம், போசனின் சம்புராமாயணம் க்ஷேமேந்திரரின் இராமாயண மஞ்சரி ஆகிய நான்கையும் பின்பற்றி யிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்னர்.13 கோசலைக்கு 1/2 பாகமும், கைகேயிக்கு 1/4 பாகமும் சுமித்திரைக்கு 1/4 பாகமும் கொடுக்கப்பட்டதாகத் துளசி ராமாயணம் கூறுகிறது. நாட்டுப்புறப் பாடல்களைப் பொறுத்த வரையில், தமிழ் வில்லுப்பாட்டு அரசியர் மூவர்க்கும் பாயசம் தரப்பட்டது என்று மட்டும் கூறுகிறது. பங்கு விகிதம்பற்றிக் குறிப்பிடவில்லை. போஜ்புரி, விரஜ மொழிப் பாடல்களும் மூவர்க்கும் தரப்பட்ட செய்தியைக் கூறுகிறதே தவிர; அளவு பற்றி எதுவும் கூறவில்லை. எனினும், போஜ்புரி பாடலை ஊன்றி நோக்குகிறபோது, கைகேயிக்கு மிகவும் குறைவான அளவே கிடைத்தது என்று தெரிகிறது. மூலங்களோடு ஒப்பிட்டால், தமிழ்ப்பாடல் கம்பனையும், மேற்காட்டிய இந்திமொழிப் பாடல்கள் வான்மீகத்தையும் பின்பற்றுவதைக் காணலாம். |
நூல்
வான்மீகம் அத்யாத்மம் ரங்கநாதம் பாஸ்கரம் மொல்ல தொரவெ துளசி போஜ்புரி | கோசலை
1/2 1/4 1/2 1/2 1/4 1/4 1/4 1/2 | சுமித்திரை
3/8 1/2 3/8 3/8 1/2 1/2 1/4 3/8 | கைகேயி
1/8 1/4 1/8 1/8 1/4 1/4 1/4 1/8 |