75

கம்பராமாயணம்   மூவரில்  சுமித்திரைக்குக்  கொஞ்சம்  அதிகமாகக்
கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது. தெளிவான அளவு குறிக்கப்படவில்லை.
எனினும்,  இரண்டாம்  முறையாகச் சுமித்திரைக்குக் கொடுக்கப்பட்டது
என்னும்  கருத்தில்  வான்மீகியுடன்  ஒத்துச்  செல்கிறது.  இருவரைப்
பெற்ற சுமித்திரைக்குக் கைகேயியைக் காட்டிலும்  மிகுதியாகப் பாயசம்
தரப்பட்டுள்ளது.  இராமனின்  தலைமை நோக்கிக்  கோசலைக்கு மற்ற
இருவரைவிட  அதிகமாகத் தரப்பட்டுள்ளது. நால்வர் மக்கள்  என்னும்
அடிப்படையில்    சில    நூல்கள்   கால்   பங்காக்கிச்   சமமாகப்
பங்கிட்டதாகக் கூறுகின்றன.

அரசியர்  முறைமை:  பாயசப்  பங்கீட்டின்போது   அரசியரைக்
குறிப்பிடுமிடத்துக்  காணப்படும் வேறுபாடுகளைக்  கீழ்வரும் பட்டியல்
தெளிவாக்குகிறது.

நூல் 

 மனைவியர் முறைமை

வான்மீகம்
அத்யாத்மம்
கம்பன்
ரங்கநாதம்
பாஸ்கரம்
மொல்ல
தொரவெ
துளசி
தமிழ்-நாட்டுப்பாடல்
இந்தி-நாட்டுப்பாடல்

 கோசலை
கோசலை
கோசலை
கோசலை
கோசலை
கோசலை
சுமித்திரை
கோசலை
கோசலை
கோசலை
 சுமித்திரை
கைகேயி
கைகேயி
சுமித்திரை
சுமித்திரை
கைகேயி
கோசலை
கைகேயி
கைகேயி
சுமித்திரை
 கைகேயி
சுமித்திரை
சுமித்திரை
கைகேயி
கைகேயி
சுமித்திரை
கைகேயி
சுமித்திரை
சுமித்திரை
கைகேயி
 

அரசியர்     மூவருள்  மூத்தவள்  கோசலை  என்பதில்  எல்லா
நூல்களும்   ஒரே   கருத்தினை  யுடையனவாய்க்  காணப்படுகின்றன.
அளவு  மிகுதி  மட்டும் கருதித் தொரவெ  ராமாயணம் சுமித்திரையை
முதலில்   குறிக்கிறது.   இரண்டாவது   மூன்றாவது   மனைவியரைச்
சுட்டுமிடத்தில்  மட்டும்  வேறுபாடு காணப்படுகிறது. சரிபாதி  நூல்கள்
கைகேயியை  இரண்டாமவளாகவும்,  சரிபாதி  நூல்கள் சுமித்திரையை
இரண்டாமவளாகவும் காட்டுகின்றன. வான்மீகம்,  ரங்கநாதம், பாஸ்கரம்,
தொரவெ,   போஜ்புரி   நாட்டுப்   பாடல்  ஆகியன  சுமித்திரையை
இரண்டாமவளாகவும்,  கைகேயியை  மூன்றாமவளாகவும் காட்டுகின்றன.
விரஜ   மொழி   நாட்டுப்  பாடலும்  கைகேயியை  மூன்றாமவளாகக்
காட்டுகிறது.    இவற்றுள்    இந்தி   நாட்டுப்பாடல்கள்,   அத்யாத்ம
ராமாயணம்  போன்ற  சமஸ்கிருத  நுல்களின்   தாக்கம்  பெறாதவை.
அவற்றுக்கு  மிகவும்  முந்தியவை.  பால   காண்டத்தின்  இறுதியிலும்
மனைவியரைப்