பற்றிக் குறிப்பிடுமிடத்து வான்மீகி இதே முறைமையைக் கையாள்கிறார்.14 எப்போதும் தசரதனின் தனிவிருப்புக்கு உரியவளாக இருந்து, அவன் செல்லுமிடமெல்லாம் (போர்க்களமாயினும்) அரசனுடன் செல்லும் இயல்பினளாகக் கைகேயி காணப்படுகிறாள். தசரதனுக்கு ஒருமுறை மூங்கில் முள் குத்தி வலி தாங்காமல் துடித்துக்கொண்டிருக்கையில் கைகேயிதான் ஓடிவந்து அந்த முள்ளைப் பிடுங்கி அவன் வலியைப் போக்கியதாகவும், அதனால் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு ஒரு வரம் தருகிறான் என்றும் மூங்கில், காட்டிற்குத் தசரதன் கைகேயியை மட்டும் அழைத்துச் சென்றான் என்றும், மொழியறியப்படாத இந்திய பழம் நாட்டுப்பாடல் ஒன்று கூறுகிறது.15 இந்த அரசியிடம் (கைகேயி) அரசன் மிகவும் பேரன்புடையவனாய் இருந்தான் என்று தசரத ஜாதகம் கூறுவதும் இங்குச் சிந்திக்கத்தக்கது.16 மேலே காட்டிய போஜ்புரி, விரஜ நாட்டுப்பாடல்களை நோக்குமிடத்துக் கைகேயி இளையவளாகவும், மக்கள் பிறந்த புதிதில் தசரதன், கோசலை முதலியோரால் புறக்கணிக்கப்படுபவளாகவும், நாட்டுப்புற மக்கள் இராமனின் தாய் என்பதால் கோசலையிடத்து மரியாதை உடையவர்களாயினும், கைகேயியின்பால் பெரிதும் இரக்கம் உடையவர்களாகவும் அதனால் அவள்மீது தனிப்பரிவு உடையவர்களாகவும் (பால காண்ட கதைப் பகுதி வரையில்) இருக்கக் காண்கிறோம். இனி, உலகியல் நிலையில் காணும் போதும், பெருமைக்கும் அதிகாரத்திற்கும் உரியவளாக மூத்த மனைவியரைக் கருதினாலும், மிக்க பிரியத்திற்கு உரியவளாகவும் சொந்த நலன்களைப் பேணுபவளாகவும் இளையவளைக் கருதி நடத்தும் பாங்கினையும், கணவன் பெருவிருப்பினனாயினும் அவன் மனநிலையோடு மிகவும் இளையவளாக இருப்பவள் பெரும்பாலு ஒத்துப்போவதில்லை என்பதையும் இந்த நாட்டுப்பாடல் விளக்குகிறது. இதுவரை காட்டப்பெற்றவற்றை யெல்லாம்தொகுத்து நோக்குமிடத்துத் தசரதன் மனைவியருள் கோசலை மூத்தவளாகவும், கைகேயி மிக இளையவளாகவும், மூன்றாமவளாகவும் இருந்திருக்கலாம் என்று எண்ண நேருகிறது. சுமித்திரை பரதனுக்குப் பின்னர் இலக்குவனையும் சத்துருக்கனனையும் கருவுயிர்த்திருக்க
14.dkS‘ky;k p lqfe=k p dS’;h p lqe?;ek (1:77:12) 15. Vidya Nivas Misra, P.104 16. Shankar Raju Naidu. P.17 |