85

பரக கிரீடிஞ்செ..... கௌதமுடு அந்தலோ வச்சி..... படதி பாஷணமாய்
படியுண்டு மீவு. (பால; பக். 44-45)

என்று  இந்திரனென  அறிந்தே   அகலிகை   அவனை  வரவேற்றுப்
பன்னக   சாலைக்குள்   அழைத்துச்   சென்று  மகிழ்வித்தாளெனவும்
பின்னர்க் கௌதமனால் கல்லாகச் சபிக்கப்பெற்றாள் என்வும் ரங்கநாத
ராமாயணம் கூறுகிறது.

பாஸ்கர ராமாயணமும் ஏறக்குறைய இதே போன்று கீழ்க்காணுமாறு
அகலிகையின் குற்றத்தை விளக்குகிறது.

அனுடு   அகல்யா   இந்துருண்டு   பிரியம்புன  கௌதமவேஷி
ஐனவாடனி மதிலோயெறிங்கி  முகமந்தங்க  இக்கடரம்மு க்ரக்குனன்
மனிசிஜூ நம்முலம் துனிசெமானமு  சிக்கின  மன்ம  துடம்வை நனு
ரதிசாதுரிம்  கவிசி  நன்னுனு நின்னுனு காவு நாவுடுன் (பால; பாடல்
521)

(“அன்றைக்கு அகல்யா  இந்திரனே  என்மீது  விருப்பம் கொண்டு
கௌதமவேடம்  கொண்டு  வந்துள்ளான்  என  மனத்துள்  உணர்ந்து
கொண்டு   புன்முறுவலுடன்   ‘இங்கே   சீக்கிரம்   வாருங்கள்’  என
அழைத்து  அவனை   மகிழ்வித்துத்  தானும்  மகிழ்ந்து  என்னையும்
தங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாள்”.)

தன்   கருத்தை   முற்றுவித்துக்   கொண்ட   இந்திரன்  அஞ்சி
வெளியேறுகையில்  எதிர்ப்பட்ட  கௌதமனால் ஆண்மையிழக்குமாறு
சபிக்கப்படுகிறான்; அகலிகை கல்லாகச் சபிக்கப் படுகிறாள்.

அகலிகையின்  சாப   நீக்கத்திற்குப்  பின்னர்  இராமலக்குவர்கள்
அகலிகையின்  பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். அவள்  இராமனுக்கு
அதிதி   பூசை   செய்கிறாள்.  அப்போது  அங்கு  வந்த  கௌதமர்
அகலிகையை  அழைத்துச் செல்கிறார். இராமன் முதலானோர் மிதிலை
நோக்கிச் செல்கின்றனர்.

மிதிலை செல்லும்  வழியில்  ஒரு  கல்லின்மீது இராமனின் பாதம்
பட்டதும்  அக்கல்லில்  இருந்து  ஓர்  அழகிய  பெண் தோன்றினாள்.
‘அதனைக்  கண்ட  விசுவாமித்திரன்  உன்  பாதத்தூளியால்  இக்கல்
பெண்ணூருவம்  பெற்றது  என்று  கூறி  அந்த  அழகிய பெண்ணின்
வரலாற்றைக் கூறிக்கொண்டே மிதிலையை நோக்கிச் சென்றான். (‘பால:
61-64)  எனச்  சுருக்கமாக மொல்ல ராமாயணம் அகலிகை வரலாற்றை
உரைக்கிறது.

கன்னட பம்ப ராமாயணம் அகலிகை வரலாற்றை உரைக்கவில்லை.
தொரவெ இராமாயணமும் பின்வருமாறு கூறுகிறது: