86

களையிழந்து  காணப்பட்ட  கௌதம  வனத்தைக் கண்டு அதன்
காரணத்தை வினவிய  இராமனுக்கு  விசுவாமித்திரன், “அகலிகையின்
மீது மோகம்கொண்ட இந்திரன் கௌதமனின் ஆசிரமத்துக்குள் வந்து
அவளுடன்  கூடியிருக்கையில்  வெளியில்  இருந்து வந்த கௌதமன்
அதைக்கண்டு  வெகுண்டு  உடல்   முழுதும்   பெண்குறியாகுமாறு
இந்திரனைச்  சபித்தான்.   மேலும்  இந்திரன்  ஆண்மையிழந்தான்.
அகலிகை   கல்லாகச்  சபிக்கப்  பெற்றாள்.  அது   நிகழ்ந்தவிடம்
இதுதான்” என்று விளக்குகிறான். அப்போது  இராமனின் பாதத்தூளி
பட்டதும் ஒரு  கல்லின்  நடுவிலிருந்து  அகலிகை  தோன்றுகிறாள்.
இராமனைக்   கண்டு   வணங்கிப்  புகழ்கிறாள்.  இதனைக்  கண்டு
அதிசயித்த இராமனுக்கு “நான் முன்பு கூறிய அகலிகை  இவள்தான்.
நின்  அருட்பார்வையால்  மீண்டும்  தன்னுருவினை  அடைந்தாள்”
என்று  விசுவாமித்திரன்  விளக்கம்  தருகிறான். அப்போது  அங்கு
வந்த  கௌதமன் இராமனக் கண்டு  அவதாரம்   என   உணர்ந்து
வணங்குகிறான்.  அவனையும்  அகலிகையையும் வாழ்த்தி  மூவரும்
மிதிலை நோக்கிச் செல்லலாயினர். (1. 12:17-23)

துளசி ராமாயணம் சாபவிமோசனம்மட்டும் கூறுகிறது. சாபம் பெற்ற
வரலாற்றைக் கூறவில்லை.

கல்லாகச்  சபிகப்பெற்ற  கௌதமனின்  மனைவி   நின்  பாதத்
துள்கிக்காகக் காத்திருக்கிறாள்.  அருள்கூர்ந்து  விமோசனம்  செய்க.
(தோகா-210)

பழைய   உருப்   பெற்றதும்   அகலிகை   இராமனைக்   கைகூப்பி
வணங்குகிறாள்.  மகிழ்ச்சிப்  பரவசத்தால் பேச நா எழாது இராமனின்
பாதங்களைப்   பற்றிக்கொண்டு   கண்ணீர்,   உகுக்கிறாள்.  பின்னர்
ஒருவாறு  தெளிந்து, “இரகு நந்தன, மெய்யுணர்வு பெற்றோர் மட்டுமே
காணக்கூடிய உன்னை, தூய்மை இழந்த பெண்ணாகிய  நானும் காணும்
பேறு   பெற்றேன்.   இப்பேற்றிற்குக்  காரணமாகிய  என்  கணவரை
வணங்குகிறேன். என்றும் உன் திருப்பாதங்களை விட்டு நீங்காத வரம்
அளித்தருள்வாயாக”   என்று  வேண்டி  அவ்வாறே  வரம்  பெற்று,
மீண்டும்  அவனிருதாள்  வணங்கி  மிக்க  மன  மகிழ்ச்சியோடு தன்
கணவரின் ஆசிரமம் புக்காள். (சந்தம் 1-4)

தமிழ் வில்லுப்பாட்டு

வாராறே மூன்று பேரும்
அதலிகா வனமதிலே
அவசரமாய் வாரபோது