87

கருங்கல்லின் மேலேயல்லலோ
கார்வண்ணன் பாதம் பட்டிடுமாம்
அந்தக் கல்லுமொரு பெண்ணாகி
கார்வண்ணனை வணங்கிடுவாள்
அதை யறிந்தார் மாயபிரான்

சுவாமி,  உலகிலுள்ள  மானிடர்கள் கால்பாதம்  ஒரு  கல்லில் பட்டால்
ரத்தம்  கசிந்து வரும். இங்கு என் பாதமானது இந்தக்  கல்லில் படவும்
இந்தக்  கல்  பெண்ணாகி என்னை வணங்கக் காரணம்  என்ன என்று
எம்பெருமான்    கேட்டபோது,    இராமா    இதுவெல்லாம்    உன்
மகிமையல்லாமல்  வேறு ஒன்றும் கிடையாது. அதாவது, இந்தப் பெண்
கௌதமருடைய   தேவி,   இவள்   பெயர்தான்   அகலிகை.  இவள்
கௌதமருக்குச்  செய்த  குற்றத்திற்காக வேண்டி இந்தப்  பெண்ணைக்
கௌதமர் கல்லாகச் சாபமிட்டார்.

எந்தனுட சாபமது
எப்போது நிவர்த்தி யாகும்
அதலிகையாள் கேட்டபோது
....... வந்திடுவார் மூன்றுபேரும்
அந்த நல்ல சமயத்திலே
அச்சுதனார் திருப்பாதம்
கல்லதிலே பட்டபோது
கல்லும் பெண்ணய் மாறிடுமாம்

என்று  கௌதம  மகாமுனிவர்  சொன்ன  வாக்கின்படி,  ராமா,  உன்
பாதம்   பட்டவுடன்   கல்லும்   பெண்ணாக   மாறிவிட்டது  என்று
விசுவாமித்திரர்    விளக்கினார்.    அப்போது   இராமன்,   “சுவாமி
அப்படியானால்   இந்த   அகலிகை   என்ற  பெண்ணைக்  கௌதம
மகாமுனிவரிடம்  கூட்டிக்  கொண்டுபோய்  ஒப்படைத்துவிட்டுத் தான்
போகவேண்டும்:21    என்று   சொல்லவும்,   அப்படியே   அவர்கள்
அகலிகையை ஒப்படைத்துவிட்டு மேலே சென்றார்கள்.

தொகுப்புரை:

அகலிகை   வரலாறு    குறித்துப்   பல்வேறு   இராமாயணங்கள்
கூறுவதைக் கீழ்வரும் தலைப்புகளில் தொகுத்து ஆராயலாம்.

1. அகலிகை வரலாறு கூறும் நூல்கள்; கூறாதன.

2. சாபவிமோசனத்துக்கு முன் வரலாறு உரைப்பன;
     பின்னர் உரைப்பன.


21. தி.சி. கோமதி நாயகம், பக். 220-222.